இல்லத்துக் குப்பைகளை
எரிப்பதை நிறுத்தி,
காற்று மாசினைத் தடுத்து,
உள்ளத்துக் குப்பைகளை
எரித்துக் கொண்டாடுவோம்
போகியை.........
உலகம் இயங்க ஒளி தந்து
நம்மை இயக்கும் சூரியனுக்கும்,
பசியாற்றி நம்மை
வாழ வைக்கும் உழவனுக்கும்
வந்தனை செய்து
வாசலில் கோலமிட்டு,
தோரணம் கட்டி கொண்டாடுவோம்
தைப்பொங்கலை..........
மனிதனுக்குப் பால் கொடுத்து,
உழவுக்குத் தோள் கொடுத்து
நம் வாழ்வில் ஒன்றிணைந்த
மாடுகளுக்கு நன்றி செலுத்திக்
கொண்டாடுவோம்
மாட்டுப்பொங்கலை........
சுற்றமும், நட்பும் சூழ
கண்டு, களித்து,
ஏற்ற தாழ்வுகளை நீக்கி,
சாதிகளை ஒழித்து,
சமயங்களை மறந்து
களிப்புடன் கொண்டாடுவோம்
காணும் பொங்கலை..........
பொங்கலோ பொங்கல்!!!
பொங்கலோ பொங்கல்!!!!!
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 #🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵 #🔥போகி பண்டிகை ஸ்டேட்டஸ்🔥 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் #happy bhogi 🥰


