ShareChat
click to see wallet page
search
கள்ளக் காதலே ஏதோ ஒரு தேவைக்கு செய்யப் படுவது தான் ! தேவை பணம், உடல் சுகம், அதீத ஆசை என மனிதருக்கு மனிதர் வித்யாசப் படுகிறது. என்னை பொறுத்தவரை பெண்ணுக்கு ஆணோ,ஆணுக்கு பெண்ணோ பிடிக்கவில்லை எனில் நேர்மையாய் அதை சொல்லி விட்டு பிரிந்து தனக்கு பிடித்த வாழ்கையை வாழலாம்.தப்பே இல்லை ! ஆனால் ஒரு உறவை காமத்துக்கும் இன்னொரு உறவு பணத்துக்கும் என்று சுயநலமாய் வாழ்வது தான் தவறு ! ஏற்காடு தனியார் காட்டேஜ் ஒன்றில், நேற்று முன்தினம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அந்த காட்டேஜிக்கு விரைந்து சென்றனர். பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சொன்ன அறையை திறந்து சென்று பார்த்தபோது, அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.முன்தினம் இந்த அறைக்கு இளைஞர் ஒருவருடன் இந்த பெண்ணும் வந்து தங்கியதாக காட்டேஜ் மேனேஜர் சொன்னதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினார்கள். கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த 30 வயது சாலா என்பது தெரியவந்தது.. இவரது கணவர் பெயர் கோவிந்தராஜ்.. ஆனால் கணவரை பிரிந்து தன்னுடைய 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்... மகன் 10ம் வகுப்பு படிக்கிறார், மகள் 9ம் வகுப்பு படிக்கிறாராம். சாலாவிற்கு ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி உள்ளார் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளவை சேர்ந்த பார்த்திபன்... இவருக்கும் 30 வயதாகிறது.. எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவரும் பார்த்திபனுக்கும் திருமணமாகி மனைவி, மகன் இருக்கிறார்களாம் 4 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலில் முடிந்துள்ளது. பல்வேறு இடங்களுக்கு வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினமும் பார்த்திபன்தான் சாலாவை ஏற்காட்டிற்கு அழைத்து வந்து தங்கியிருந்தார் என்பதும், பிறகு கொலை செய்து தப்பி உள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் அதற்குள் பார்த்திபன் தலைமறைவாகிவிட்டார்.. எனவே தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். கள்ளக்காதல் ஜோடிக்கு நடுவே கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது... ரூ.7 லட்சம் வரை பார்த்திபனிடம் இருந்து இதுவரை சாலா வாங்கி உள்ளதாக தெரிகிறது.. அந்த பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டும் சாலா தரவில்லையாம் நேற்று முன்தினம் ஏற்பாடு காட்டேஜில் கள்ளக்காதல் ஜோடி ரூம் எடுத்து தங்கி உள்ளது.. அங்கு உல்லாசமாக இருந்துவிட்டு, கொடுத்த பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டாராம்.. ஆனால் பணத்தை சாலா மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதனால் மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டார்களாம் சாலா பார்த்திபனிடம் உல்லாசம் மட்டும் அனுபவிக்கிறாயே, பணம் எங்கே? என்று கேட்டுள்ளார். பணம் ஊருக்கு போய் அனுப்பி விடுகிறேன் என்றாராம்.. ஆனால், பணம் தந்தால் மட்டுமே மீண்டும் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று சாலா சொன்னாராம்.. இதனால் வாக்குவாதம் வெடித்துள்ளது.. சாலா பணம் கேட்பதிலேயே குறியாக இருந்ததால் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு பிறகே ஆத்திரம் அதிகமாகி கொலை வரை சென்றுள்ளார் பார்த்திபன்.. தன்னை திருமணம் செய்து கொள்ள பார்த்திபனை ஆரம்பத்தில் இருந்தே சாலா வற்புறுத்தி வந்துள்ளார்.. ஆனால் அதற்கு பார்த்திபன் மறுத்துள்ளார்.. அப்படியானால் பெரிய தொகையை தனக்கு கொடுத்து செட்டில்மென்ட் செய்து வைத்துவிடுமாறும் பிரஷர் தந்து வந்தாராம் சாலா கொலை செய்துவிட்டு, ரூம் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பார்த்திபன் மட்டும் வெளியேறி உள்ளார்.. ஆனால் இதனை காட்டேஜில் யாருமே கவனிக்கவில்லை... சேலத்துக்கு பைக்கில் வந்து சேர்ந்த பார்த்திபன், தன் நண்பரிடம் இதுபற்றி சொல்லவும், இதைக்கேட்டு அதிர்ச்சி அந்த நண்பர்தான் போலீசுக்கு தகவல் தந்துள்ளார்.. போலீசார் காட்டேஜில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்தபோதுதான், பார்த்திபன் மட்டும் ரூமை விட்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது. ஆனால் கொலை நடந்ததாக சொல்லப்படும் அந்த தனியார் காட்டேஜ், உரிய அனுமதி பெற்று இயங்கவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனால் ஏற்காடு தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் காட்டேஜை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் சொந்த வீட்டை உரிய அனுமதியின்றி காட்டேஜ் போல பயன்படுத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.. இதையடுத்து காட்டேஜை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். #💑கணவன் மனைவி காதல்💞 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑என் காதல் கணவா💞
💑கணவன் மனைவி காதல்💞 - ShareChat