ShareChat
click to see wallet page
search
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟲 🇮🇳꧂_*      *_🌼 சனிக்கிழமை_ 🦜*             *_📆 𝟭𝟬•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள். ⭐️அஸ்வினி : நம்பிக்கை மேம்படும். ⭐️பரணி : பொறுமை வேண்டும். ⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல்கள் ஏற்படும். மனதில் நினைத்த கனவுகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள். ⭐️கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும். ⭐️ரோகிணி : பொறுமை வேண்டும். ⭐️மிருகசீரிஷம் : தேடல்கள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* நினைத்து சில காரியம் தாமதமாகி முடிவு பெறும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயுடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️திருவாதிரை : முயற்சிகள் கைகூடும். ⭐️புனர்பூசம் : ஆதரவான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நிம்மதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை. ⭐️புனர்பூசம் : குழப்பம் நீங்கும். ⭐️பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️ஆயில்யம் : அனுகூலமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மகம் : தாமதங்கள் விலகும். ⭐️பூரம் : நிதானத்தை கடைபிடிக்கவும். ⭐️உத்திரம் : நெருக்கடிகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் உண்டாகும். தடைகள் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️உத்திரம் : அனுபவம் உண்டாகும். ⭐️அஸ்தம் : தெளிவுகள் உண்டாகும். ⭐️சித்திரை : தாமதம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். போட்டி மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வது தவிர்க்கவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️சித்திரை : குழப்பங்கள் நீங்கும். ⭐️சுவாதி : கருத்துகளில் கவனம். ⭐️விசாகம் : நெருக்கடியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் உதவிகள் மூலம் சில பிரசனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️விசாகம் : முன்னேற்றமான நாள். ⭐️அனுஷம் : பிரசனைகள் குறையும். ⭐️கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆராய்ச்சி கல்வியில் அலைச்சல் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மைகள் விலகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும். ⭐️பூராடம் : மந்தத்தன்மைகள் விலகும். ⭐️உத்திராடம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்கள் தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு. ⭐️உத்திராடம் : வசதிகள் மேம்படும். ⭐️திருவோணம் : வாதங்கள் தவிர்க்கவும். ⭐️அவிட்டம் : ஒத்துழைப்பான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பொறுமை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள். ⭐️அவிட்டம் : புரிதல் உண்டாகும். ⭐️சதயம் : திருப்பம் ஏற்படும். ⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழல் உண்டாகும். ஆரோக்கிய பிரசனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு. ⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும். ⭐️ரேவதி : தெளிவுகள் பிறக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍
✡️ராசிபலன் - ShareChat