பொங்கல்ன்றது ஒரு சாதி மதம் சாராப் பண்டிகை, தமிழர்களின் விழா, பாப்கார்ன்ஸ்க்கு பத்து பைசா உபயோகமில்லாத நோம்பி. அதைத் தமிழ்நாட்டில் இருக்க அத்தனை குடும்பங்களும் கொண்டாடணும்ன்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூவாயிரம் ரூவா உதவித்தொகை / அன்பளிப்பு / பரிசு / ஏதோ ஒன்னு ஆக வழங்குது.
மூவாயிரம் சிலருக்கு ஒரு மணி நேர செலவா இருக்கலாம், சிலருக்கு ஒரு நாள் செலவா இருக்கலாம். ஆனா பண்டிகை வந்தாலே செலவாகுமேன்னு பதட்டத்துல இருக்க குடும்பங்களுக்காகத்தான் இத் தொகை வழங்கப்படுது. நாலு பேர் இருக்க ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சமா துணிமணி ஒரு ரெண்டாயிரம், பொங்க செலவு ஒரு ஐநூறு, கறி எடுக்க ஒரு ஐநூறுன்னு நோம்பிக்குன்னு கடன் வாங்காம தமிழர் விழாவை சந்தோசமா கொண்டாடுங்கன்னு தர்றது.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணம் இல்லைன்றது ஒரு நலத்திட்டம். அது எந்தப் பெண்களுக்கான நலத்திட்டம்ன்னா மாசம் பத்து பன்னெண்டாயிரத்துக்கு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கோ சூப்பர் மார்கெட்டுக்கோ ஜவுளிக்கடைகளுக்கோ வேலைக்குப் போற பெண்களுக்கானது. வாங்குற சம்பளத்துல ரெண்டாயிரம் பஸ்ஸுக்கே போயிட்டிருக்க சமயத்துல இப்டி வந்த ஒரு திட்டத்தோட பலன் என்னன்னு அவங்களுக்குத்தான் புரியும்.
இந்த அடிப்படை நோக்கம் கூட புரியாம ரெண்டு மூனு நாளா பொங்கலுக்கு ரேஷன்ல குடுக்குற மூவாயிரத்தை வாங்கி போட்டோ புடிச்சுப் போட்டு அதை வெச்சு போட்க்ளப்ல எடம் வாங்கலாமா, போயஸ்கார்டன்ல வீடு வாங்கலாமா, அரேபியாவுல எண்ணெய்க்கிணறு வாங்கலாமான்ற ரேஞ்சுல சில வறட்டுக் காமெடிகள் சுத்திட்டு இருக்கறதைப் பாக்கறப்போ அருவருப்பாவும் வருத்தமாவும் இருக்கு... #🙏நமது கலாச்சாரம் #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #💪தி.மு.க


