#👉வாழ்க்கை பாடங்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜
தருமபுரி தென்றலே
தாகம் கூடுதே
மருங்காபுரி மரிக்கொழுந்து
மயக்கம் தருதே
அழகாபுரி நேசம்
அன்பில் தொடரவே
பழமும் சுவைக்க
பக்குவம் வேண்டுமே
மேலைச்சிவபுரி மாங்கனி
மென்று ருசிக்கலாம்
காலையும் மாலையும்
கற்பனைப் பாத்திரமே
ரத்தினபுரி இருவரும்
ரகசியம் நிறைந்தோம்
சத்தியம் பறையும்
சரித்திர உருவமே
கிருட்டிணகிரி கதம்பம்
கிடங்கில் இருக்கும்
அருவியாய் சுரந்து
அங்கத்தில் தவழும்
சொர்ணபுரி நிறையும்
சொக்கன் ஆளவே
ஆர்வமும் ஆசையும்
அனுதினமும் அடங்கும்
சிவகிரி நேசம்
சிறந்து விளங்கும்
சிவலோகம் இறுதியில்
சிறப்போடு கடக்கும்
✍️ ஆதி தமிழன்


