ShareChat
click to see wallet page
search
மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரனை பகுதியில் உள்ள திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கழக பொருளாளர் நாடாளுமன்ற கழக குழு தலைவர் திருமிகு.டி.ஆர்.பாலு MP அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா எம்.எல்.ஏ அவர்கள் முன்னிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுனங்களை விற்பது, பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கியப் பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர், பெருங்களத்தூர் பேரூர் செயலாளர் S.சேகர், பீர்க்கன்காரனை பேரூர் செயலாளர் லயன் R.S.சங்கர், தாம்பரம் மு.நகர மன்ற து.தலைவர் D.காமராஜ், பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தனர். #ModiGovtFailures #BJPDestroysDemocracy #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat