ShareChat
#💪Friday Motivation மே 15, 1859ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் பிறந்தவர் விஞ்ஞானி பியர் கியூரி. இவருக்கு 1903ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது மனைவியுடன் இந்த பரிசு கொடுத்தால் தான் இதனை ஏற்பதாகவும், இல்லையேல் இதனை தான் நிராகரிப்பதாகவும் கூறினார். காரணம் பியர் கியூரியின் மனைவி மேரி கியூரியும் ரேடியம் மற்றும் பொலோனியம் கண்டுபிடிக்க உதவினார். அதனால் அவரது பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டால் தான் இந்த விருதை ஏற்பேன் என்றார். அதன்படி மேரிக் கியூரிக்கு விருது அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த விருதை ஏற்றார் பியர் கியூரி. இதன்மூலம் நோபல் பரிசு வெல்லும் மேரி முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். பின்னர் பியரின் மரணத்தைத் தொடர்ந்து 1911ல் மேரி கியூரி வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். மேரி க்யூரியின் மகள் ஐரீன் க்யூரி செயற்கை கதிரியக்கத்துக்காக 1935 ல் நோபல் பரிசு பெற்றார். இவருடன் இவர் கணவரும் (Frederick Juliet Currie)ஃபிரெடெரிக் ஜுலியட் க்யூரி நோபல் பரிசு பெற்றார். இரண்டாவது மகள் ஹென்றி லெபைசி யுனிசெஃப்பில் தலைவராக பணியாற்றிய போது1965ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்ற பெருமையை மேரி- பியரி குடும்பம் பெறுகிறது. #🌎பொது அறிவு-வினா விடை மேடை #🗞இன்றைய செய்திகள் #📕TNPSC தேர்வுகள்