ஒரு சமயம் ஶ்ரீமதி M.S சுப்புலட்சுமி yin புருஷரான சதாசிவம் அவர்களுக்குத் தலையில் ஓர் கட்டி வந்தது. அதை டாக்டரிடம் காட்டி சோதனைகள் செய்ததில் கேன்சர் என்று தெரிய வந்தது. எல்லாருக்கும் மனசில் கலக்கம். கைங்கர்ய பரர் வேதமூர்த்தி காஞ்சியில் பெரியவாளிடம் முறையிட ச்சென்றார். சதாசிவம் MS அம்மாளும் பெரியவாளுக்கு நமஸ்காரத்தை சொல்லச் சொன்னான்னு மட்டும் சொல்லிட்டு சதாசிவத்துக்குக் கட்டி என்பதை பிரஸ்தாபிக்க வே
இல்லை. பெரியவா இவரிடம் பெரிய சொம்பு எடுத்துண்டுக் கச்சபேஸ்வரர் கோவில் அக்னி தீர்த்தக்குளத்தில போய் ஜலம் கொண்டு வா என்றார். ஶ்ரீ பிரதோஷம் மாமா இவர் துணைக்கு ஒரு ஆள் அனுப்பாடுத்த நாள் ஸ்நானம் செய்து விட்டு இவர் அக்னி தீர்த்தத் துடன் பெரியவாளிடம் அந்த சொம்பை சமர்ப்பித்தார்.பெரியவா தான் திருக் கரத்தால் தீர்த்தச் சொம்பை தியானித்து தான் திருக் கரங்களால் மூடி அனுகிரகித்தார். இதைக் கொண்டு போய் சதாசிவத்திடம் கொடுத்து ஸ்நானம் செய்யச் சொல் என்று அருளினார். மறு நாள் சதாசிவம் வைதீஸ்வர பெரியவா அனுகிரகித்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து விட்டுக் கையை தலையில் வைத்தபோது கட்டி மாயமாய் மறைந்திருந்த அதிசயத்தைக் கண்டார்!
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.
ஜகத்குரு சரணம் #தமிழ் நாதம் #மகா பெரியவா.


