கோர வெள்ளத்தில் 76 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 27 பேர் மாயமாகி உள்ளனர்.
வீடுகள், உறவுகள், உடைமை என அனைத்தையும் இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நிவாரண பணிகளை வேகப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#மழை #தெரிந்து கொள்வோம் #உயிர் பலி


