"ஒரு குழந்தைக்கு எத்தனை தரம் நாமகரணம் பண்ணுவேள்"
இந்தக் குழந்தை கர்ப்ப வாசத்துல இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம் செஞ்சு வைச்சுட்டாரே நரசிம்மர்.
அவரே நாமகரணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் வேற என்ன சொல்றது அக்காரக்கனியே உங்க குடும்பத்துக்கு கிடைச்சிருக்கு.
பரமாசார்யாளோட பரம பக்தாளா இருந்த ஒரு குடும்பத்துல பொறந்த ஒரு புள்ளையாண்டானுக்கு கல்யாணம் பண்ணிவைக்கத் தீர்மானிச்சா அவனைப் பெத்தவா உடனே மகாபெரியவாளை தரிசனம் பண்ணி அவரோட உத்தரவைக் கேட்டா.
அடிக்கடி மடத்துக்கு வரக்கூடிய அவாளை பரமாசார்யாளுக்கு நன்னாவே தெரியும் வழக்கமா ஆசிர்வாதம் பண்ணி பிரசாதம் குடுத்துட்டு ஏதாவது நல்ல காரியத்துக்கு உதவும்படி அவாள்ட சில சமயம் சொல்லுவார் ஆசார்யா.
அவாளும் அதை பரம சந்தோஷமா உத்தரவைக் கேட்டா
புத்ரனுக்கு விவாஹம் செய்யறதுக்கு முன்னால ஒரு நல்ல நாளாய் பார்த்து பக்கத்து பெருமாள் கோயில்ல பானகம் விநியோகம் பண்ணு.
எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொல்லிட்டு கைநிறைய கல்கண்டை அவாகிட்டே குடுத்தார்.
வழக்கமா ஏதாவது ஒரு பழத்தைத் தரக்கூடிய பெரியவா கல்கண்டைமட்டும் குடுத்ததும் கொஞ்சம் யோசிச்சா அவா இருந்தாலும் பெரியவா கையால எதைக் குடுத்தாலும் அது மகாபிரசாதமாச்சே அந்தத் திருப்தியோட வாங்கிண்டா.
இங்கே ஒரு விஷயத்தை சொல்லியாகணும்
அந்தப் மணப்பெண்ணின் குடும்பத்துல எல்லாருக்குமே மகாபெரியவாளை ஒரு ஆசார்யாளா பிடிக்கும்.
அதே சமயம் தங்களோட குலதெய்வமான நரசிம்மரோட உத்தரவைத்தான் அவா எல்லா விஷயத்துலயும் கேட்டுப்பா.
கல்யாணம் நல்லபடியாக நடந்தேரியது நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்னு சொல்லுவாளே அதே மாதிரி அந்த பெண் கருவுற்று வளைகாப்பும் முடிஞ்சுது.
தாயும் சேயும் ஆரோக்யமா இருக்கணும் குழந்தை க்ஷேமமா பொறக்கணும்னு பையனோட ஆத்துல எல்லாரும் பரமாசார்யாளை வேண்டிண்டா பொண்ணோட குடும்பத்துல குலதெய்வமான நரசிம்மர்கிட்டே பிரார்த்தனை பண்ணிண்டா.
தலைச்சன் பிரசவம்கறதால பொண்ணை அவளோட பொறந்த ஆத்துக்கு அனுப்பிவைச்சா புள்ளையாத்துக்காரா.
அம்மா ஆத்துல ஆனந்தமா இருந்தா அந்தப் பொண்ணு ஒரு நாள் ராத்திரி அவளுக்கு ஒரு கனவு வந்தது.
உனக்குப் பொறக்கப்போற குழந்தைக்கு என்னோட பேரை வை தூண்தோன்றிய பெருமாள் அவளோட கனவுல தோன்றி சொல்றதாக வந்தது அந்த சொப்பனம்.
குலதெய்வமான நரசிம்மரே கனவுல வந்ததால் சந்தோஷம் பரவசம் எல்லாம் பாவித்தாலும் கூட ஒரு பயமும் வந்தது.
தன்னோட மாமனார் குடும்பத்துல எல்லாரும் பரமாசார்யா சொல்றைதைத் தான் வேதவாக்கா எடுத்துக்கறவா.
அவா கிட்டே எப்படி இதைச் சொல்றது ரொம்ப நேரம் யோசிச்சவ வீணா நாம குழம்புறதுல என்ன புண்ணியம் நம்ப இஷ்டத்துக்கு என்ன நடக்கப் போறது நடக்கறதெல்லாம் நரசிம்மரோட செயல்னுட்டு குழம்பறதை நிறுத்தினா.
விடிஞ்சு எல்லாரும் எழுந்ததும் தான் கண்ட சொப்பனத்தை தன்னோட அப்பா அம்மாகிட்டே சொன்னா அவா கொஞ்சம் தயங்கிண்டே சம்பந்தி ஆத்துல சொன்னா.
அதெல்லாம் கூடாது எங்களுக்கு எல்லாம் பரமாசார்யா உத்தரவு தான் ஒங்க இஷ்டத்துக்கு எதையாவது தீர்மானம் பண்ணிட்டு சுவாமி சொப்பனும்னு வீணா கடவுள்மேலே பழி போடாதேள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னா.
புள்ளை ஆத்துக்காரா பேரை ஏத்துக்காதது கூட பரவாயில்லை சொப்னத்தில் வந்தது பொய்னு சொல்றாளேன்னு வருத்தமா இருந்தது.
உரிய காலத்துல அழகான ஆண்குழந்தை பொறந்தது அந்தப் பொண்ணுக்கு. பிரசவகால சௌசம் எல்லாம் முடிஞ்சதும் மகாபெரியவாளை தரிசக்கப் புறப்பட்டா எல்லாரும்.
குழந்தையை பரமாசார்யா முன்னிலையில் கிடத்தினா
பெரியவா நீங்கதான் குழந்தைக்கு நாமகரணம் பண்ணி வைக்கணும்.
உங்க வாக்குலேர்ந்து வர்ற பேர்தான் இவனுக்கு வைக்கப்போறோம் பவ்யமா சொன்னார் குழந்தையோட அப்பா வழித் தாத்தா.
சில நிமிஷம் குழந்தையையே உத்துப் பார்த்தார் குழந்தை விழிச்சுண்டு உம்மாச்சித் தாத்தாவைப் பார்த்து பொக்கைவாயைத் திறந்து சிரிச்சுது.
ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்
எல்லாரும் அமைதியா இருந்த சமயத்துல அதிரடியா கேட்டார் பரமாசார்யா.
எல்லாரும் பதறிப்போனா ஆசார்யா என்ன சொல்றேள்னு அதிர்ச்சியா கேட்டார் புள்ளையோட தகப்பனார்.
ஏன் உன் மருமகள் உங்கிட்டே சொல்லலையா இந்தக் குழந்தை கர்ப்ப வாசத்துல இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம் செஞ்சு வைச்சுட்டாரே நரசிம்மர்.
அவரே நாமகரணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் வேற என்ன சொல்றது அக்காரக்கனியே உங்க குடும்பத்துக்கு கிடைச்சிருக்கு.
சந்தோஷமா போயிட்டு வா சொல்லி ஆசிர்வாதம் செஞ்சார் ஆசார்யா அப்படியே அத்தனை பேர்கண்ணுலேர்ந்தும்
பொலபொலன்னு பாஷ்பம் வழிஞ்சுது.
தான் சொன்னது பொய்யில்லைன்னும் நிரூபணம் ஆயிடுத்து.
நரசிம்மர் பேர் வைக்கிறதும் உறுதியானதால் ரெட்டிப்பு சந்தோஷம் அந்த தாயாருக்கு அதோட மகா பெரியவா மேல பக்தியும் உருவாயிடுத்து.
அவாத்துப் பொண்ணு கனவுல நரசிம்மர் வந்து தன்னோட பேரை வைக்கச் சொல்லி கேட்டுண்டது ஆசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுது இது ஒரு ஆச்சர்யம் தான்.
இதையெல்லாம் முன்னாலேயே தெரிஞ்சுண்டு கல்யாணம் பண்ணப்போறதா சொன்ன சமயத்திலே கல்கண்டு கைநிறைய தந்தது எப்படி.
பின் குறிப்பு கல்கண்டு என்ன சம்பந்தம் அக்காரக்கனின்னு
நரசிம்மரைச் சொல்றது வைணவ சம்பிரதாயத்துல உண்டு.
அக்காரக்கனினா கல்கண்டு என்று அர்த்தம்.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்

