ShareChat
click to see wallet page
search
பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் எம்பெருமானுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்...... இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று எம்பெருமானிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.... அதற்கு எம்பெருமான் ஆத்மாவிடம் சொல்வாராம்..... ஒரு ஜீவனுக்குரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்!.. இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அனுப்புகிறான் எம்பெருமான்!.. ஒன்று *ஆத்மா* மற்றொன்று *மனது!* ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், இறைவனை‌ சென்றடையலாம்! மனதை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தால், பாவங்கள் செய்து இந்த பூலோகத்தில் முடிவில்லா பிறவிகளை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஏழாவது மாதம் வரை‌ ஞாபகத்தில் இருக்குமாம்.. ஏழாவது மாதத்தில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு எல்லாம் ஞாபகம் வந்து அது எம்பெருமானை அழைக்குமாம்... என்னை இனிமேல் பிறக்க வைக்காதே. எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம். அப்பொழுது ஷடம் என்னும் வாயு எம்பெருமானை அழைக்கும். அது ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்! அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம், ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது! சிசு குழந்தையாக பிறந்து, இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும், விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் வந்து பிறந்து விடுகிறோம். வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட சடாரி என்னும் பாதத்தை நம் தலையில் சாற்றுவார்கள்! அது ஏதற்கு என்றால், "நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்". "மறதியை கொடுக்காமல் 'ஷடம்' என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும்படி‌ எனக்கு அருள்வாயாக" என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் சாற்றும் தாத்பர்யம்! மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் அந்தர்யாமியாய் இருந்து கொண்டிருக்கிறான். நாம் சிலசமயம் தவறான வழியில் ஒரு காரியத்தை செய்யும்பொழுது நமக்குள் இருந்து ஒரு குரல் நம் தவறை சுட்டிக்காட்டும், அதுவே அந்தர்யாமியாய் நமக்குள் இருக்கும் எம்பெருமான்! ஏதாவது ஒரு பிறவியில் நாம் திருந்தி, ஆத்மாவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து நம்மிடத்தில் வருவான் என்று இறைவன் பல சந்தர்ப்பங்கள் அளிக்கிறானாம்! ஏனெனில் நாம் அவனது சொத்து! 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ மகா விஷ்ணு நமோ நாராயண# #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
ஸ்ரீ மகா விஷ்ணு நமோ நாராயண# - ShareChat