#என்றும் mgr
மறைந்தும் மறையாத
புகழோடு வாழும் எங்கள்
மனிதர் குல மாணிக்கம்;
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரம், எம்ஜியார்
நினைவலைகள்--!
"சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்..!
சிவகாசியில் ஏறிய, கிராமத்துச் சாயல் கொண்ட அந்த கணவனும், மனைவியும்
(வயது சுமார் 40 இருக்கும்) நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தார்கள்.
பிறகு மெதுவாக அந்தக் கணவன்
என்னிடம் கேட்டார்:
'சார்... இந்த ரயில் எக்மோர் ஸ்டேஷன்லதானே நிக்கும்..?'
'ஆமா..'
'எக்மோரிலிருந்து எம்.ஜி.ஆர். சமாதிக்கு எப்படிப் போகணும்..?'
நான் அவரை உற்றுப் பார்த்தேன்..
கணவன் சொன்னார்:
'மெட்ராசுக்கு முதல் முதலா இப்பத்தான் போறோம்.. சொந்தக்காரங்க கல்யாணம். ஒரே ஒருநாள் பயணம்தான்.'
'சரி..'
'ஊருக்கு திரும்பறதுக்குள்ள என் மனைவிக்கு சென்னையில் ஒரே ஒரு இடத்தை மட்டும் காட்டினால் போதுமாம்..'
நான் சொன்னேன்: 'சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்குங்க..'
கணவன் மறுத்தார் : 'இல்லையில்லை... வேறு எந்த இடமும் இந்த தடவை போறதா இல்லை... என் மனைவி புறப்படும்போதே போட்ட ஒரே கண்டிஷன்... எம்.ஜி.ஆர். சமாதியை பாக்கணுமாம்....! அதுல காது வச்சு எம்.ஜி.ஆர். வாட்ச் ஓடுற சத்தத்தைக் கேக்கணுமாம்...'
எனக்கு அதிசயமாக இருந்தது..!
என்ன மந்திரம் போட்டார் எம்.ஜி.ஆர்...?
எத்தனையோ மக்கள் இன்னும் எம்.ஜி.ஆர். மயக்கம் தீராமலே இருக்கிறார்களே..? அது எப்படி..?
இந்தக் கேள்விகளுக்கான பதில் ,
ஒரு மூத்த பத்திரிகையாளர் எழுதிய அனுபவத்தைப் படித்தபோது கிடைத்தது.
எஸ். ராமசாமி என்ற மூத்த பத்திரிகையாளர், எம்.ஜி.ஆருடனான தனது அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார் :
'1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். எம்.ஜி.ஆரின் பிரசாரத்தைக் குறிப்பெடுப்பதற்காகக் கூடவே சென்றேன். பிரசாரத்தின் போது, உடன் வரும் செய்தியாளர்களுடன் சேர்ந்து உணவருந்துவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
ராணிப்பேட்டையில் இரவு நீண்டநேரம் எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார்.
இரவு உணவுக்காக, அதிகாலை 3 மணி அளவில் அமர்ந்தோம். அனைவருக்கும் இலை வைத்து உணவு பரிமாறப்பட்டது. கோழிக்கறி, ஆட்டுக்கறி என வகை வகையாக உணவுகள் பரிமாறப்பட்டன.
எல்லோரும் சாப்பிட ஆரம்பித்த சமயத்தில், ஓர் இலை மட்டும் காலியாக இருந்ததை எம்.ஜி.ஆர். கண்டுவிட்டார். அது என்னுடைய இலை. ‘நீங்கள் சைவமா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன்.
‘இவருக்கு உடனடியாக சைவ உணவு தயார் செய்து வாருங்கள். அதுவரை நான் உணவருந்த மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.
அதிகாலை 3 மணிக்கு எங்கே உணவு கிடைக்கும்? எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டாரே! மேலும் அவரும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.
கட்சிக்காரர்கள் ஓடிப்போய் எங்கேயோ பக்கத்து வீட்டில் இட்லி, சட்னி தயார் செய்துகொண்டு வந்து எனக்கு கொடுத்தனர். அதன் பிறகுதான் எம்.ஜி.ஆரும் சாப்பிட்டார்.'
இந்த அனுபவத்தைப் படித்தபோது ,
எம்.ஜி.ஆரின் மேஜிக் ரகசியம் புரிந்தது..!
அது ... அன்பு....! தன்னைப் போல் பிறரையும் எண்ணும், தன்னலமற்ற அன்பு...!
நண்பர் எழுதியது நினைவுக்கு வந்தது:
'தாய்மையைப் படைத்த பின்னர் தன்னலமற்ற அன்பு கொஞ்சம் மிஞ்சி விட்டது..! பார்த்தான் இறைவன்...
படைத்து விட்டான் எம்.ஜி.,ஆரை...!' "
- John Durai Asir Chelliah அவர்களின் பதிவு
MGR
என்ற மூன்றெழுத்து ,
மந்திரம் இல்லை,
கருணாநிதி சொன்ன தந்திரமும் இல்லை,
தன்னைப் போல பிறரை எண்ணி,
வாழ்ந்து காட்டிய,
தயாநிதி மூர்த்தி அவர்--!
அவரின் உள்ளத்தை தங்கள் உள்ளத்தால் அறிந்து வைத்துள்ள தமிழக மக்கள், அவரை எப்படி மறக்க முடியும்--?
அவரைத்தவிர வேறு யாரையும் அவர் இடத்தில் வைத்து நினைத்துப் பார்க்க முடியும்---?
01:39

