இதுவரை நாம் தமிழர் கட்சி செய்த சாதனைகள்,
• 2009 இனப்படு..கொ....லை...க்கு பின் ஈழத்தில் வீழ்ந்த தமிழர்களின் புலிக்கொடியை மீண்டும் தமிழ் மண்ணில் பட்டொளி வீசி பறக்கச்செய்த பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும்.
• 2009 ல் அரசியல் இயக்கமாக இருந்ததை 2010ல் அரசியல் கட்சியாக மாற்றி… சி.ப ஆதித்தனார் அவர்களால் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே நோக்கத்தை முன்னெடுத்து செல்ல நாம் தமிழர் கட்சி அரசியல் ஆட்டத்தில் காலெடுத்துவைத்தது.
• 2016ல் முதல் தேர்தலை சந்தித்த அது 1.1% வாக்குகளை பெற்றது, இந்திய வரலாற்றில் எந்த அரசியல் கட்சியும் முன்வைக்காத பல செயல் திட்டங்கள் அடங்கிய ஆகச்சிறந்த ஆட்சி வரைவை கொடுத்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• திராவிட மற்றும் வட இந்திய ஆரிய கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று கூறி தனித்து நின்றே இன்று வரை களம் கண்டு வருகிறது.
• தமிழகத்தில் கொள்கை கோட்பாடு என்ற ஒன்றை கொண்டிருக்கும் ஒரே கட்சி!
• இந்தியாவிலேயே பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் - 20 ஆண்கள் 20 பெண்கள்; சட்டமன்றதேர்தலில் - 117 ஆண்கள் 117 பெண்கள் என பெண்ணுரிமையை நிலைநாட்டிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
• நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஆணுக்கு பெண் சமமல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்கிற உயர் இலட்சிய கோட்பாட்டை வைத்திருக்கும் ஒரே கட்சி!
• தான் போட்டியிட்ட 2019 தேர்தலில் 3.8% வாக்குகளை பெற்றது, 2021ல் 7% வாக்குகளை அதாவது 31 இலட்சம் வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் பாஜக திமுக சூழ்ச்சியால் பறிக்கப்பட்டு வெறும் இரண்டே வாரத்தில் புதிய ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட்டு வாக்குக்கு காசு கொடுக்காமல் 8% மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது.
• கொள்கை மற்றும் கோட்பாட்டினால் உயர்ந்த கட்சி நாம் தமிழர் கட்சி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கிய தமிழக அரசையும் சன் ஃபாமா நிறுவனத்தையும் தன்னந்தனியே எதிர்த்து வழக்கு தொடுத்து வேடந்தாங்கலை மீட்ட தனிப்பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும்!
• 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு தொடுத்து அதை நிறுத்தி மக்களின் நிலங்களை காத்த பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும்.
• மீத்தேன் ஹைடிரோகார்பனுக்கு எதிராக போர்கொடி தூக்கி வழக்கு தொடுத்து மணு கொடுத்து தஞ்சை பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்த பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும்.
• 10 இலட்சம் பனை மரங்களை இதுவரை நாம் தமிழர் கட்சி சார்பில் தம்பிகள் நட்டிருக்கிறார்கள், பத்தாண்டு பசுமைத்திட்டம் பல கோடி பனைத்திட்டம் என்று அதற்கு பெயர். மேலும் பனைமரங்களை மற்ற மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்கள்!
• நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வை முதன் முதலில் இந்த மக்களுக்கு கொடுத்தது சீமான் அவர்களின் பேச்சுக்கள் தான் A1 A2 வகை பால் பற்றிய விழிப்புணர்வை நாட்டு மாடுகளை அழிக்கும் கார்பரேட்டின் செயல்திட்டத்தை அம்பலப்படுத்தி பேசிப் பேசி இந்த மக்களை உசுப்பேத்தியவர் சீமான். அதன் விளைவு தான் தன்னெழுச்சியாக எழுந்த சல்லிக்கட்டு மக்கள் போராட்டம்!
• தமிழ் பற்றிய விழிப்புணர்வு! தமிழகத்திலேயே துண்டு சீட்டு இல்லாமல் தமிழில் மேடையில் பல நேரம் தமிழகத்தின் அரசியலை பேசக்கூடிய ஒரே தலைவர் சீமான் மட்டுமே! அதுவரை லைவ் என்றிருந்தது நேரலையானது பிரச்சாரம் பரப்புரையானது, இப்படி தனித்தமிழின் பெருமையை மீண்டும் பறைசாற்றிய பணி நாம் தமிழர் கட்சியின் பணி.
• தஞ்சை உள்ளிட்ட கோயில்களில் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது, நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் தொடுத்து வாதாடிய வழக்கின் விளைவாகத்தான். தமிழில் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு என்பது கட்டாயமாக்கபட்டது கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் தமிழ் குடமுழுக்கு கோரி வழக்கு தொடுத்த போது கிடைத்த தீர்ப்பினால் தான்.
• இப்படி தமிழ் மீட்சியையும் தமிழர் மெய்யியலையும் மீட்க தனித்தனியே பாசறை வீரத்தமிழர் முன்னணி மற்றும் தமிழ் மீட்சி பாசறை கட்டிய கட்சியும் நாம் தமிழர் கட்சி மட்டுமே! வீதிதோறும் பெயர்ப்பலகைகள் தமிழில் இருப்பதை ஆங்காங்கே உறுதி செய்து வருகிறது நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப்பாசறை!
• உலகிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்க என்றே தனியே ஒரு பாசறை கட்டிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. ஆற்று மணல் அள்ளுவது, மலைகளை உடைப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்திற்கும் உயிரை பணையம் வைத்து பேராடிவரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே! அப்படி போராடி அவர்கள் மூடிய சட்ட விரோதமான கல்குவாரிகள் மணல்குவாரிகள் எண்ணற்றவை!
• சுற்றுச்சூழல் பாசறை மூலம் சொந்த பணத்தில் தூர்வாரிய குளங்கள் நூற்றுக்கணக்கில், இந்தப்பணியையும் ஆட்சிக்கு வராத ஒரு கட்சி தன் சொந்த பணத்தில் செய்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• இலஞ்ச ஒழிப்பு பாசறை என்று இந்தியாவிலேயே ஏற்கனவே கொடுத்த இலஞ்சப்பணத்தையும் திரும்ப பெற்று தந்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே! இதுவரை 10 இலட்சம் வரை இலஞ்சப்பணத்தை திரும்பப்பெற்று உரியவரிடம் கொடுத்திருக்கிறார்கள்!
• 100% குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்களை நிறுத்திய ஒரே கட்சி என தேர்தல் ஆனையத்தால் பாரட்டப்பட்ட ஒரே கட்சி.
• இந்தியாவிலேயே சிறந்த நீர் மேலாண்மை திட்டம் வைத்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. தமிழர்களின் நீர்ப்பாசன முறை அத்தகைய சிறப்பு மிக்கது!
• கல்வி மருத்துவம் தூய குடிநீரை இலவசமாக வழங்குவது ஒவ்வொரு அரசின் கடமை அதை வழங்க திட்டம் வைத்திருக்கும் ஒரே கட்சியும் இந்தியாவில் நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• ஆதித்தமிழரின் விடுதலை இல்லாமல் மீதித்தமிழரின் விடுதலை வெல்லாது என்று கூறி 2016ல் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களை அதிக அளவில் நிறுத்திய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• மூன்றாம் பாலினத்தவரை முதன்முதலில் வேட்பாளராக நிறுத்திய கட்சியும் நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• பெரும்பான்மை சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தாது சீட்டு மறுக்கப்பட்ட குடிகளான குயவர் நாவிதர் வண்ணார் போன்றவர்களையும் பெரும்பான்மை சமூகங்கள் இருக்கும் இடங்களில் நிறுத்திய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• இவன் தமிழன் என்று பார்த்தால் ஓட்டு போடு இல்லை சாதி பார்த்து போடும் உன் ஓட்டு எனக்கு தீட்டு போட்டுவிடாதே என்று தேர்தல் பரப்புரையில் கூறிய ஒரே தலைவர் சீமான் மட்டுமே!
• சாதி மதம் கடந்த தமிழர் ஓர்மையை முன்னிறுத்தும் கட்சி நாம் தமிழர் கட்சி, தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே என்கிற முழக்கத்தை முன்வைத்து செயல்படும் ஒரே தமிழ்த்தேசிய அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• கெயில் குழாய் பதிப்பிற்கு எதிராக, கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக, அணு மின் கழிவை அங்கேயே புதைக்கும் திட்டத்திற்கு எதிராக, EIA 2020, NIA, முத்தலாக், CAA, பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி, புதிய கல்விக்கொள்கை, அக்னிபாதை என பாஜக கொண்டு வரும் பாடாவதி திட்டங்கள் அனைத்தையும் துணிவுடன் எதிர்த்து போராடி வருவதும் நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• தமிழர் பண்டிகையாம் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டி பல ஆண்டுகளாக போராடி மணு கொடுத்து வலியுறுத்தி பெற்றுக்கொடுத்தது நாம் தமிழர் கட்சி!
• குடிவாரி மொழிவாரி கணக்கெடுப்பை எடுக்கக்கூறி போராடி வரும் கட்சியும் நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• ஏழு தமிழர் விடுதலை மற்றும் இசுலாமிய சிறைக்கைதிகளின் விடுதலையை முன்னெடுத்து சென்ற பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும்.
• காவிரி நதிநீர் உரிமைக்காக தமிழ்நாட்டுக் கொடியுடன் வீரமாகப் போராடி சிறை சென்றது நாம் தமிழர் கட்சி, IPL க்கு எதிராக போராடி அதை இடமாற்றம் செய்ய வைத்தது.
• மூவேந்தர்களின் சின்னங்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கொடியை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி. தமிழ்க்கடவுளாம் முருகனின் படத்தை அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி.
• கண்ணகி பெருவிழா, இந்திர விழா, முருகன் விழா, அரசேந்திரனுக்கு விழா, இராஜராஜ சோழனுக்கு விழா, பாண்டிய மன்னர்களுக்கான விழா, மாயோன் பெருவிழாதமிழ் முன்னோர்களுக்கான வீரவணக்கம் செலுத்துதல் என திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட தமிழினத் தலைவர்கள் வரலாற்று ஆளுமைகள் அனைவருக்கும் விழா எடுத்து வருவது நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• உலகிலேயே மழலையர் பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை வைத்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
• உலகிலேயே குருதிக்கொடை பாசறை வைத்திருக்கும் ஒரே கட்சியும் நாம் தமிழர் கட்சி மட்டுமே! பல ஆண்டுகளாக அதிக குருதிக்கொடை வழங்கியதாக தமிழக அரசால் பாராட்டப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்ட பாசறை இந்த குருதிக்கொடை பாசறை.
• மகளிர் பாசறை, வீரக்கலை பாசறை, தகவல் தொழில்நுட்ப பாசறை என பாசறைகள் பல அமைத்து சமூகப்பணியாற்றி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி.
• நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தால் நாட்டு மாடுகள் வளர்ப்பு அதிகரித்திருக்கிறது, இயற்கை விவசாயம் அதிகரித்திருக்கிறது.
• தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் நேர்மையாக களமாடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• நாம் தமிழர் கட்சியுடன் தேர்தலில் காசு கொடுக்காமல் நின்றால் திராவிட கட்சிகளால் கூட வெல்ல முடியாது, காசு கொடுக்காவிட்டால் எம் மக்களுக்கு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமே இல்லை!
• பனை மரங்களின் பயன்பாடு கருப்பட்டி வெல்லம் பற்றிய விழிப்புணர்வு வெள்ளை சர்க்கரை தவிர்ப்பு போன்ற தொடர் உடல் நலம் சார்ந்த பிரச்சாரங்களை செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி.
• எதிர்கால தமிழகத்தின் அரசியலே இனி நாம் தமிழர் கட்சிக்கு முன் பின் என்று தான் வரையறுக்கப்படும் அந்தளவிற்கு நாம் தமிழர் கட்சியை புறக்கணித்தாலும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தூய அரசியலை யாராலும் புறக்கணிக்கமுடியாது.
• மீனவர் நலன் காக்க நெய்தல் படை, ஆடு மாடு வளர்ப்பது அரசாங்க வேலை என தற்சார்பு பொருளாதாரம் பற்றி எண்ணற்ற திட்டங்களை இந்தியாவிலேயே சிந்தித்து தனது வரைவில் எழுதிக்கொடுத்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• வந்தேறி ஆரிய திராவிட கட்சிகள் தமிழர்களை மதமாக சாதியாக பிளந்து பிரித்து ஆள சூழ்ச்சி செய்து வரும் வேளையில் சாதி மதம் கடந்து தமிழர்களை ஓர்மைப்படுத்தும் முயற்சியில் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே, இளைஞர் இளைஞிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• ஊடக வலிமை இல்லாமல், பொருளாதாரம் இல்லாமல் எந்த கார்பரேட்டிற்கும் அடிபணியாது இத்தனை வீரியமாக செயல்படும் ஒரே கட்சி இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• இந்தியாவில் இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு 99 நாடுகளில் கிளை இருக்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே!
• நாம் தமிழர் என்பது வெறும் தமிழ் நாட்டிற்கான அரசியல் கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அடையாளம்.
• விவசாய நிலங்களின் ஊடாக உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்தலுக்கு எதிராக போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், என இந்த மண்ணிற்கும் மக்களிற்குமான அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி மிக வீரியமாகப்போராடியிருக்கிறது வழக்குகளை சந்தித்திருக்கிறது சிறை சென்றிருக்கிறது.
• வெறும் சாராய பொருளாதாரத்தை முன்னெடுக்கும் திராவிட அரசியலுக்கு முன் பாலில் மட்டுமே 3 இலட்சம் கோடி சந்தை மதிப்பிருக்கிறது என்று பொருளாதாரத்தை எப்படி தற்சார்பாக கட்டமைக்கலாம் என்கிற தெளிவான வரையறையை ஆட்சி வரைவில் வைத்திருக்கு ஒரே கட்சி!
• அப்போ மதுவிற்கு என்ன மாற்று என்றால் அது பணம்பால் தென்னம்பால் என சத்தான உணவையே அதற்கு மாற்றாக கொடுக்க வரைவில் சீரிய திட்டம் வைத்திருக்கும் கட்சி!
• ஒரு துடிப்புள்ள பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு வருவது இன்றைய தேதிக்கு அது நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• இன்றைக்கு தமிழ் ஆளுமைகளை மொழிப்போர் ஈகியர்களை வந்தேறி திராவிடம் திரும்பி பார்க்கிறது மலர் வணக்கம் செய்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று களத்தில் இருப்பதால் மட்டுமே, இல்லை என்றால் திராவிட புருடா புராணங்களை தான் தமிழ் மக்களுக்கு வரலாறு என்று பறைசாற்றிக்கொண்டிருந் திருந்திருப்பார்கள்!
• முல்லைப்பெரியாறு காவிரி விவகாரங்களில் என்றைக்கும் இல்லாத எதிர்ப்பும் கண்டனங்களும் அண்டை மாநிலங்களுக்கு வீரியமாக கொடுக்கப்படுகிறது என்றால் அது தமிழ்த்தேசியத்தின் எழுச்சியே காரணம்.
• வாட்டாள் நாகராஜ் போன்ற கன்னட வெறி கும்பலால் இனி தமிழ் எழுத்துக்களை முன்பு போல அழிக்க முடியாமல் போக காரணமே களத்தில் நாம் தமிழர் கட்சி நிற்பதால் தான்.
• நாம் தமிழர் கட்சி என்ன சாதனை செய்யவில்லை? மக்களுக்காக ஒரு படை இல்லை எனில் மக்களுக்கென்று எதுவுமில்லை என்கிறார் மாசே துங் அந்த மக்களுக்கான ஒரு அரசியல் படை தான் நாம் தமிழர் கட்சி!
• கொரோனா நேரத்தில் நாம் தமிழர் கட்சி செய்யாத தொண்டா? கபசுரக்குடிநீர் வழங்குவது முதல் உணவு முகக்கவசம் என ஊர் ஊராக அவர்கள் செய்யாத தொண்டில்லை!
• ஆளும்கட்சிகளின் அரசியல் சார்பில் இருக்கும் செய்தி ஊடகங்கள் கைவிட்டபோதும் சமூக ஊடகங்களின் வாயிலாக காமக்கொடூரன் சிவசங்கர் பாபா போன்ற பாப்பா வெறியன்களை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டியது நாம் தமிழர் கட்சி சார்பு ஊடங்கள் தான்.
• சமூக வலைதளங்களில் மிக வீரியமாக செயல்பட்டு வருவது நாம் தமிழர் பிள்ளைகள் தான், கீச்சுகளில் அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை கொத்துகுறிகள் மூலம் டிரெண்டிங்கில் வைத்து அரசிற்கு அறிவுறுத்தி வருவதும் நாம் தமிழர் கட்சியினர் தான்.
• எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தேசிய தலைவர் யார் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியதே நாம் தமிழர் கட்சி தான், இல்லை என்றால் கண்ட கண்ட ஓங்கோல் வந்தேறி தெலுங்கனை தமிழினத்தலைவன் என்று தமிழர்கள் தவறாக கருதியிருக்கக்கூடும்!
• திராவிடம் என்றால் தமிழர் அல்லாதவர்களால் தமிழ்நாட்டில் வசதியாக வாழவும் தமிழர்களை அடிமை செய்து ஆளவும் கொண்டு வரப்பட்ட ஒரு பித்தலாட்டம் என்பதை தமிழ் மக்களுக்கு புரிய வைத்திருக்கும் ஒரு கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே!
• கீழடியை தமிழர் நாகரீகம் என கூற வைத்ததே நாம் தமிழர் கட்சி தான், இல்லை என்றால் இந்திய நாகரீகம் என சங்கிகளும் திராவிட நாகரீகம் என திராவிட சங்கிகளும் அழைத்திருப்பார்கள்!
• தமிழ் இலக்கியங்களை திராவிட திரட்டு என்று திராவிடம் திருட்டு செய்ய இருந்ததை தடுத்து நிறுத்துயது தமிழ்த்தேசியமும் நாம் தமிழர் கட்சியும்!
• தமிழகத்தில் தமிழர்களுக்காக இருந்திருக்க வேண்டிய ஒரே அரசியல் அது தமிழ்த்தேசிய அரசியல் தான் அதை விடுத்து மத வெறியை தூண்டி வட இந்திய ஆரியர்களின் அரசியலையும் சாதிவெறியை தூண்டி தமிழர்களை பிளந்து பிரித்து தெலுங்கர்களால் நடத்தப்படும் திராவிட அரசியலையும் இங்கு நடத்த அனுமதித்தே தவறு, அவர்கள் சர்வ வலிமைபெற்று ஊடகங்களையும் அரச இயந்திரங்களையும் நீதித்துறையையும் இன்னும் ஜனநாயகத்தின் தூண்களனைத்தையும் கட்டுப்படுத்தி வருகிறார்கள், இப்படி ஒரு சவால் நிறைந்த களத்தில் நாம் தமிழர் கட்சி நிற்பதே சாதனை தான் ஒரு தேர்தல் விடாமல் எதிர்த்து களமாடுவதே சாதனை தான்!
• 2026ல் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி செய்யப்போகும் சாதனைகளைப் பாருங்கள்.
• தமிழர் அறம் என்றால் என்ன தமிழர் ஆட்சி முறை என்றால் என்ன என்று இந்த உலகம் காணும் ஒரு மகத்தான நிலையை தமிழ்நாடு அப்போது எட்டும்!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
நாம் தமிழர்✊ #👍தமிழ்நாட்டின் TOP MLA யார்❓ #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📰தமிழக அப்டேட்🗞️ #📱சிறப்பு வீடியோக்கள்🎦

