ShareChat
click to see wallet page
search
பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்டு (89). இவர் 1981-ம் ஆண்டு ஆர்டினரி பீப்பிள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வந்தார். இவரது இறப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராபர்ட் ரெட்போர்ட் செப்டம்பர் 16, 2025 அன்று உட்டா மலைகளில் உள்ள சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் நேசித்த இடம், அவர் நேசித்தவர்களால் சூழப்பட்டது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான சன்டான்ஸ் நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். உட்டாவுக்குச் சென்று மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பையும் அமெரிக்க மேற்குப் பகுதியையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #😢பிரபல ஆஸ்கர் விருது நடிகர் காலமானார்
😢பிரபல ஆஸ்கர் விருது நடிகர் காலமானார் - ShareChat