ShareChat
click to see wallet page
search
நமது சைவ சமயம் "தகரம்" அல்ல!! அது தங்கம் போன்றது!! அந்த பொன்னம்பல ரகசியம் குறித்து பார்ப்போம்!!! ************************************************** ஆதிகால வேதங்களிலும் வழிபாட்டு முறைகள் இருந்தன. அவற்றிற்கு உபாசனா என்று பெயர். 24 உபாசனா அல்லது வித்யைகள் (இறைவனை அடையும் முறைகள்) இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றில் ஒன்று "தகர வித்யை". தகரம் என்ற சொல் இப்போது "அதிக உபயோகமற்றது; எளிதில் அழிந்து போகக் கூடியது" என்று பொருள்படும். வேத கால சொல்லின் அர்த்தம் தெரியவில்லை!!😄 இந்த வித்யை உலகம் உண்மை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். உலகம் மாயை என்று வேதகாலத்தில் பிறகு முடிவான போது, பல உபாசனாக்கள் உபயோகமற்று போயின. அவற்றில் முற்றிலும் அவ்வாறு ஒதுக்கப் பட்ட வித்யை இது; ஆகையால், இது உபயோகமில்லாத "தகர வித்யை" என்று ஆனதென்று நினைக்கிறேன்!! 😄. ஆனால், பாம்பன் சுவாமிகள் நமது சைவ சமயத்தையும், முருகப் பெருமானையும் ஏத்துவதற்கு பதிலாக இந்த வேத கால "தகர வித்யையை" , பொன்னம்பல ரகசியமாக "தகராலய ரகசியம்" என்று எழுதி விட்டாரோ என்று தோன்றுகிறது!! (அவர் அப்படி எழுதியிருக்காவிடிலும் அவர் சிதம்பர ரகசியத்தையே பாடியதாக எண்ணியிருக்கிறார் என்பது என் யூகம்). அந்த காலத்தில் (இந்த காலத்திலும் கூட) பலருக்கும் "சைவத்தின் வேர் கூட வேதத்தில் தான்" என்று சான்றுறைக்க, establish செய்ய துடிக்கின்றனர்!! அந்தோ பாவம்; பாம்பன் சுவாமிகளும் அப்படியா என்று தெரியவில்லை!! நான் முழுவதுமாக அந்த புத்தகத்தை படிக்க வில்லை!! *************************************************. வேத காலத்தினருக்கு பத்தோடு பதினொன்றாக இருந்த ஒரு வித்யா தத்துவமே பின்னர் தமிழர் சமயமாக, இங்கு சிதம்பர ரகசியமாக, பொன்னம்பல ரகசியமாக தமிழருக்கு முதன்மையான சைவ சமயமாக இருக்கிறது என்று சிலர் நினைத்தால் அது அவர்களின் மூடத்தனத்தை தான் காட்டுகிறது!! ஏனென்றால் வேத பாரம்பரியத்திற்கு அப்பால், அதற்கும் முன்னதாக ஆதி காலத்தில் தோன்றிய சமயம் தமிழர் சமயம். இப்போது சைவம், வைணவம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது. நமது சைவ சித்தாந்தம், நமது சைவ கலாச்சாரம் சிவபெருமான் அருளால் தனி பாரம்பரியத்தில் உருவானது. வேதத்திலிருந்து உருவானது அல்ல!! ************************************************ இன்னும் சொல்லப் போனால் இந்த சிதம்பர ரகசியம், தங்க பொன்னம்பல ரகசியம் சமஸ்கிருதத்தை சேர்ந்த அத்வைத சிவனிடத்தோ, ஆகம சிவனிடத்தோ இன்றைக்கும் கூட கிடையாது!!😄😄😂 ஆகையால், அந்த விதத்திலும் கூட இன்றைக்கும் இது ரகசியமே!! இன்றைய சைவ சித்தாந்தத்திலும் கூட ஒரு வகையில் இல்லை; அதாவது மெய்கண்ட சைவத்தில் கூட இல்லை!! ஏன் தெரியுமா?! தமிழ் கடவுள் ஆதி சிவபெருமானுடையது இது. சிவபெருமானின் முருகனாக அவதாரம் செய்த போது, இது சிவனிடம் இருந்து, "குகனின் தத்துவமாக" மாறியது!! உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரிய நமது பெருமான் நடனமாடும் (அதாவது உலகை வழிப்படுத்தும் ஆடல்) இடம் தில்லை. அந்த தில்லை நமது இதயத்திலும் இருக்கிறது. நம் இதயக் குகையில் சிவபெருமான் நடனமாடுவதை தான் சிதம்பர ரகசியமாக தில்லையில் ஸ்தாபித்தனர். முருகனின் அவதாரத்திற்கு பிறகு , ஆதி தமிழ் சிவபெருமானின் இடத்தை வட நாட்டு மாயையை சார்ந்த அத்வைத, ஆகம சிவன்கள் ஆக்கிரமித்த போது (இப்போதும் பல கோவில்களில் அதே நிலை தான்!!😄) , இந்த பொன்னம்பல, சிதம்பர ரகசியம் நம் சைவ சமய வாழ்வில் இருந்தும் மறைந்தே போனது!! இந்த தத்துவம் எப்படி என்றால் உலகம் உண்மை என்று இல்லற வாழ்வில் கணவன் - மனைவியாகவே சிவபெருமானை அடையும் தத்துவம்!! "நாங்கள் உலகை துறக்க தேவையில்லை!! டூயட் பாடிக் கொண்டே கூட முக்தி அடைவோம்" என்று நான் கூறுவேன்!! 😄😂 எவ்வளவு உன்னதமான சமயம் நம் சைவ சமயம்!! இன்றைக்கு ஆதினங்கள் எல்லாம் அமைத்து வடநாட்டு சிவன்கள் ஆக்கிரமித்து விட்டனர்!! இல்லற வாழ்க்கையை அற வாழ்க்கையாக இறைவனை அடையும் வாழ்க்கையாக வாழ்வது இன்றைக்கு மிகவும் கடுமையாகி (அல்லது ஆக்கி) சமஸ்கிருத சிவன்கள் பிஸினஸ் நன்றாக நடக்குமாறு உலகம் அமைந்துள்ளதே இந்த "தங்க ரகசியம்" , தகர ரகசியமாக உள்ளதற்கு காரணம்!! நமது ஆதி சிவன் மீண்டும் வந்தால் தான் நாம் நமது பழம் பெருமையை அடைய முடியும்;, ரகசியம் அன்றாட வாழ்க்கையாக மாறும்!! ஆனால், இந்த "கலி யுகம்" உலகத்தை மாயையாக, அறம் சார்ந்த இல்லறத்திற்கு வழியில்லாததாக மாறிய உலகமாக இருந்தால் கடினம் தான்!! ************************************************* தகராலய ரகசியம் என்று பாம்பன் சுவாமிகள் எழுதியது சிதம்பர ரகசியம்; சிவன் முருகனான பிறகு "குக தத்துவம்" என்று ஆனது என்று நான் சில வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டேன். திரு. சிவகுமார் அய்யா அவர்களின் "தகராலய ரகசியம்" சொற்பொழிவு கேட்க நேர்ந்தது. ஆகையால் இதை மீண்டும் எழுத தோன்றியது. அவர் மேற்கூறியவற்றை கூறியிருக்கிறாரா? எப்படி உரை கூறுகிறார் என்று தெரியாது. அந்த சொற்பொழிவை இடற்படுத்தும் எண்ணம் துளியும் எனக்கு கிடையாது!! அதனால் பயன் பெறுபவர்கள் பயன் பெறட்டும். என்னுடைய அல்லது எனக்கு கிடைத்த விளக்கத்தை நான் எழுதுவது தவறில்லை என்றே நினைக்கிறேன்!! (அவர் கூறும் உரை "துறவு" சார்ந்த தகராலயம் போலிருக்கிறது; துறவு பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்). ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - WILATLITIIAL ! ~టన JAAL  தகராலய ரகசியம் பொன்னம்பல ரகசியம் WILATLITIIAL ! ~టన JAAL  தகராலய ரகசியம் பொன்னம்பல ரகசியம் - ShareChat