#🎉 திருச்செந்தூரில் களைகட்டும் கந்தசஷ்டி திருவிழா✨ தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் (தேவராசன்)ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார். இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன. இவர் இயற்றியவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கியானம் மற்றும் நாராயண கவசம் ஆகும்.
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
பொருள் - தேவர்களின் துயர் தீர சூரனுடன் போர் புரிந்த குமரன் திருவடிகளை நினைவில் நிறுத்துவாய் நெஞ்சே என்று பொருள்.
கந்த சஷ்டி கவசம் நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பண்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மைய நடஞ்செய்யும் மயில்வா கனனார்................... #🕉️ஓம் முருகா #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🌺 மகா கந்தசஷ்டி நல்வாழ்த்துகள் 🙏


