A forward
உடன் பிறந்தோர்
❤️ ❤️ ❤️ ❤️ ❤️❤️
நமக்கு வயதாகும் போது தான் அண்ணன்–தங்கை அக்கா–தம்பிகள் என்ற உறவுகள் எவ்வளவு விலை மதிப்பில்லாத பரிசாக நமக்கென பெற்றோரால் விட்டுச் செல்லப்பட்டு இருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
சிறு வயதில் அண்ணன்–தங்கை அக்கா–தம்பிகள்தான் நமக்கு நெருக்கமான விளையாட்டு நண்பர்கள்.
தினமும் சிரிப்பிலும் சலசலப்பிலும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியான சிறுவயதை பகிர்ந்து கொண்டோம்.
பெரியவர்கள் ஆனபோது,
தனித்தனி குடும்பங்களை அமைத்து, வேறு வேறு வாழ்க்கையை வாழ்ந்தோம்.
அப்போது நம்மை ஒன்றாக இணைத்துக் கொண்ட ஒரே பாலமாக இருந்தது பெற்றோர்கள்.
வயது ஆக ஆக, பெற்றோர் இல்லாமல் போகிறார்கள், சுற்றத்தார் எண்ணிக்கையும் குறைகிறது, அப்போதுதான் உறவின் மதிப்பை மெதுவாக உணர்கிறோம். ஆம், வயதான பின்தான், நம்மோடு இரத்தத் தொடர்புடைய வர்கள் இருப்பதின் மதிப்பை உணர முடிகிறது. பெற்றோர் இல்லாத நிலையில் அண்ணன்– தங்கை, அக்கா– தம்பிகள்தான் நமக்கு நெருக்கமானவர்கள். நண்பர்கள் விலகி செல்லலாம், பிள்ளைகள் வளர்ந்து தங்கள் பாதையைத் தொடரலாம்.ஆனால் துணைவி / துணைவன் தவிர, வாழ்க்கையின் பின் பாதியை நம்மோடு சேர்ந்து நிறைவு செய்யக் கூடியவர்கள்அண்ணன் தங்கை அக்கா தம்பிகள்தான். வயதாகிய பின்னும் அண்ணன் – தங்கை அக்கா– தம்பிகள் கூடிவரக் கூடிய நிலை ஒரு பெரிய பாக்கியம்.
அவர்கள் நம்மோடு இருக்கிறவரை வெப்பம் குறையாது.
அவர்கள் நம்மோடு இருக்கிறவரை எந்த சிரமத்தையும் நாம் அஞ்ச வேண்டியது இல்லை.ஆகையால், முதுமையில் அண்ணன் தங்கை அக்கா தம்பிகளுக்கு நம்மால் இயன்றளவு நல்லவர்களாக இருக்க வேண்டும்.எந்த பழைய விரோதமும் இருந்தாலும்,
சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறுத்தும் மன்னித்தும் இருக்க வேண்டும்.
சகோதரர்களுக்குள் அவிழ்க்க முடியாத முடிச்சு எதுவும் இல்லை.உரையாட முடியாத கேடயம் எதுவும்இல்லை.பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டாம். சிறிது கூடுதலாக ஒருவருக்கு ஒருவர் சார்ந்து ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால், உறவு நாளுக்கு நாள் வலுவாகும்.ஏனெனில் அண்ணன் தங்கை அக்கா தம்பிகள்தான் நம் பெற்றோர் இந்த உலகில் நமக்குத் தந்து சென்ற மதிப்புமிக்க பரிசுகள். #smileyela

