படம் : செந்தூரப்பூவே
பாடல் : சோதனை தீரவில்லை
இசை : மனோஜ் கியான்
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
ஆண்குரல் : பி.ஜெயச்சந்திரன்
ஆண்1 : சொந்தம் இங்கே யாரோ யாரோ...
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ...
முத்தெடுக்கப் போனேன் நானே...
மூச்சடைச்சுப் போனேன் மானே...
பாசம் ஒரு வேஷம் தானே...
நம்புவது மோசம் தானே...
ஆண்/குழு : சொல்லுங்க சொல்லுங்க...
அழுத்திச் சொல்லுங்க...
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்லை...
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும் இங்கே...
நம்பிக் கிடப்பதில் அர்த்தமில்லை...
ஆண்1 : சோதனை தீரவில்லை...
சொல்லி அழ யாருமில்லை...
முன்னப்பின்ன அழுததில்லை...
சொல்லித்தர ஆளுமில்லை...
ஆண்2 : ரோசாப்பூவூ எங்கே எங்கே...
அது ராசா மார்பில் ஆடும் அங்கே...
புத்திக் கெட்டுப் போனேன் தாயே...
பொட்டு வச்சு வாழ்க நீயே...
பூப்பறிச்ச பாவி நானே...
பூ முடிச்சு வாழ்க மானே...
ஆண்2:நந்தவன ஒன்னு வெந்துவிடுமின்னு...
தண்ணி கொண்டு வந்து காத்திருந்தேன்...
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு...
வந்து கலப்பதுப் பார்த்திருந்தேன்...
ஆண்2 : சோதனை தீரவில்லை... #s