ShareChat
click to see wallet page
search
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! எஸ்.ஐ.ஆர். ரத்து செய்ய வேண்டும் – முஸ்லிம் மக்கள் கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து, எஸ்.ஐ.ஆர். (S.I.R) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி தலைவர் வி. விக்ரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழுப்புரம் நகர செயலாளர் சுஹைல் முகம்மது வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மதினா, ஆயிஷா பேகம், தேவேகி, அமிதா, சாகிரா பானு, பாத்திமா பி., ஆயிஷா பி., ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முஸ்லிம் மக்கள் கழகநிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஷோக்கத் அலி, பழனிவேல், ஏழுமலை, , அலாவுதீன், , செல்வம், பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் காணை ஒன்றிய தலைவர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார். எஸ்.ஐ.ஆர் என்ற பேரில் இந்தியாவில் உள்ள வாக்காளர்களை அலறவிடும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு துணை போகின்ற தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கினால் வாக்காள பெருமக்கள் பெரும் அதிர்ப்தியிலும் குழப்பத்திலும் இருந்து வருகிறார்கள் இதனை முஸ்லீம் மக்கள் கழகம் தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டித்து மேலும் குலுருபடியான எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்தை முஸ்லீம் மக்கள் கழகம் சார்பில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - ShareChat