கடலூர் அருகே காணாமல் போன கல்லூரி மாணவனை தேடியபோது, 45 வயது பெண் ஒருவருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், அப்பெண் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல காலையில் கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை நண்பர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.நேரமாக நேரமாக பதற்றமான பெற்றோர் வேறு வழியில்லாமல் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு ெசய்த போலீஸ் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குள்ளஞ்சாவடி போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாத குப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது மாயமான கல்லூரி மாணவர் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் நின்றுக்கொண்டிருந்தார். உடனே போலீஸ் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது திருமணமான 45 வயது பெண்ணுக்கும் கல்லூரி மாணவருக்கும் கடந்த சில நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் கல்லூரி மாணவரை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவனுக்கு 45 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #📢 செப்டம்பர் 25 முக்கிய தகவல்🤗

