ShareChat
click to see wallet page
search
*நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்... !!!* ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார். சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார் 1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???" என்று கேட்டார். 👉 *இல்லை என பதில் சொன்னார்.* 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். 👉 *இல்லை என பதில் சொன்னார்.* 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். 👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.* 👉 *"யாருக்கும் பயனில்லாத,* 👉 *நல்ல விஷயமுமில்லாத,* 👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,* *என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.* நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும். நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள். *நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.* 👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!* உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை. மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!! எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!! வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!! நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!! நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!! மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள். *நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!* #quote.. #quote