நான் அரசியல் வாதி இல்லை நான் ஓரு கிட்னி திருடன்?
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கதிரவன், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை அடியோடு மறந்து, "நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் பிசினஸ்மேன். ஒரு ரூபாய் கொடுத்தால் 1.50 ரூபாய் வருதான்னுதான் யோசிப்பேன். எனக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் 200 சதவிகிதம் செய்வேன். அரசிடம் பணம் இல்லையென்றால்கூட என் அப்பா பணத்தை வைத்து செய்து தருவேன்" என்று பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இவரது இந்த கூற்றுக்கள், அரசியலை பொது சேவைக்கான களமாக அல்லாமல், தனது தனிப்பட்ட முதலீட்டுக்கான லாபவெறி கொண்ட வியாபாரமாகவே அணுகுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. தான் செய்யும் சேவைக்கு 200% லாபத்தை எதிர்பார்ப்பது என்பது, மக்கள் வரிப்பணத்தை அல்லது அரசுப் பதவியை லாபம் ஈட்டும் ஒரு கருவியாகப் பார்ப்பதற்கு சமம். மேலும், "என் அப்பா பணத்தை வைத்து செய்வேன்" என்று பேசுவது, அரசு நிதியைத் தாண்டி, அதிகாரத்தின் மூலம் தனியார் முதலீட்டிற்கு அதிக லாபம் ஈட்டும் அபாயகரமான போக்கைக் குறிக்கிறது.
சிறுநீரக திருட்டுச் சம்பவங்களில் இவரது மருத்துவமனை மீது புகார் எழுந்த பின்னணியில், இவர் மக்கள் சேவை செய்ய வந்துள்ளதாகக் கூறுவது முற்றிலும் வேடிக்கையானது. இவர் தற்போது மக்கள் பணியில் இருப்பதை மறந்து, அப்பட்டமான தொழிலதிபர் மனநிலையுடன் பேசியிருப்பது, ஊழல் செய்யவும், பணம் சம்பாதிக்கவும் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் திமுகவின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இந்த மக்கள் விரோத, வியாபார நோக்குடன் செயல்படும் திமுகவுக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
#தாளக்குடி #🔶பாஜக #பாஜக_லால்குடி #முருகன்

