ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.டிசம்பர். 6 நடிகையர் திலகம் சாவித்திரி பிறந்த தினம் இன்று(1935). சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாஸ்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள் நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்த சாவித்திரி எல்.வி.பிரசாத் இயக்கிய தெலுங்கு படமான சம்சாரம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.. அடுத்ததாக எல்.வி.பிரசாத் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய கல்யாணம் பண்ணிப்பார் படத்தில் நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு கிடைத்ததென்னவோ தெலுங்குப்பட வாய்ப்புகள்தான். அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான தேவதாஸ் படத்திலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். 1955இல் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் சாவித்திரி. அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா என்ற திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர், நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில். அதன் பிறகு ‘அமரதீபம், மாயாபஜார், கடன் வாங்கி கல்யாணம்’ என நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1959இல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கமல்ஹாசன் சிறுவனாக நடித்த முதல் படமும் இதுதான். 1960இல் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, ஜெமினியுடன் சாவித்திரி இணைந்து நடித்த ‘பாசமலர்’ படம் சாவித்திரிக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிச் சென்றுவிட்டது. சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர் என்று சொல்வதைவிட பாசமலர்களாகவே வாழ்ந்திருந்தனர் என்றே சொல்லலாம். இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் அளவிற்கு மக்களின் மனதில் சாவித்திரி சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்கள். அந்த நாட்களில் சிவாஜி மற்றும் ஜெமினியோடுதான் அதிக படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி. சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து, நடிகைககளில் சாவித்திரிக்கு மட்டுமே ரசிகர்களால் வழங்கப்பட்டது. இதற்கு ஒரு சிறு உதாரணமாக நவராத்திரி படத்தைக் கூறலாம். அதில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தாலும் சாவித்திரியும் அந்த ஒன்பது கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுத்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி என மூன்று படங்களில் மடடுமே சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த மூன்று படங்களிலும் சாவித்திரி மற்ற கதாநாயகிகள் போலின்றி மிக துணிச்சலும் தனித்துவமும் கொண்டவராக தன்னை வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல ‘ஜக்கம்மா’ திரைப்படமும் சாவித்திரியின் வித்தியாசமான நடிப்பைப் பறைசாற்றியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 318 படங்களில் நடித்திருக்கிறார் சாவித்திரி. நடிப்போடு சேர்த்து டைரக்சனிலும் சாவித்திரிக்கு ஆர்வம் எட்டிப் பார்க்கவே அதிலும் ஒரு கை பார்த்துவிடுவதென்று துணிச்சலுடன் இறங்கினார் தெலுங்கில் நான்கு படங்களையும் தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார்.. தமிழில் அவரே இரண்டு படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுவே கடைசிக் காலகட்டத்தில் அவரைப் பொருளாதார ரீதியாக பாதித்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.. திரையுலகில் 1950, 60 மற்றும் 70களில் சகாப்தமாக வாழ்ந்தவர், நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வைத்து இருந்தார். பாசமலர் படத்தில் பாசக்கார தங்கையாகவும், திருவிளையாடலில் சக்தியே பெரிது என்று வாதாடும் ஈசனின் மனைவியாகவும், படித்தால் மட்டும் போதுமா படத்தில் அன்பான மனைவியாகவும் கவர்ந்தார். பாவமன்னிப்பு, நவராத்திரி, கர்ணன், களத்தூர் கண்ணம்மா, பரிசு, கந்தன் கருணை, மாயாபஜார் உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் திறமையான நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்தன. சிறந்த நடிப்பால் ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டம் அளித்து பாராட்டப்பட்டார். சென்னையில் மாளிகை போல் வீடு கட்டி அதற்குள் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை இவர்தான். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலம் தொட்டு எத்தனையோ நடிகைகள் தனித்துவமான நடிப்புத் திறமையால் தங்களது பெயரை நிலைநாட்டிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தனது மிகச் சிறந்த நடிப்பின்மூலம் ‘நடிகையர் திலகம்’ என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடிகையென்றால் அனைவரும் ஏகமனதாக கூறுவது சாவித்திரியைத்தான் *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat