வந்தவாசி, செப் 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா தொழிற் பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பல்லவன் கல்விக் குழும தலைவர் பா.போஸ் முன்னிலை வகித்தார். தம்பிபேட்டை
ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஐடிஐ முதல்வர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்தன், ஐடிஐ இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️