#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #👌புத்துணர்வு செய்தி👏
வியாழக்கிழமை குரு தரிசனம்: திருச்செந்தூர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி...
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான தலமாக, குரு பகவானால் ஏற்படக் கூடிய கஷ்டங்களிலிருந்து தப்பிக்கக் கூடிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
தேவ குருவான ப்ரஹஸ்பதி செந்திலம்பதியில் தவமிருந்து முருகனை வரவழைத்து அசுரர்களை அழித்து தேவர்களை காக்க வழிவகை செய்தார். அவரது அதி தேவதையான தட்சிணாமூர்த்தி இவ்வாலய கோஷ்டத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார்.
திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் அன்பர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் நல்ல பலன் காணலாம்.
குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகன் ஞான குருவாக வீற்றிருக்கிறார் என்பது சிறப்பு.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏


