#Trichy Dharma ஆசை.!*
குடும்பம் குட்டி குடும்பி என்று ஆனபின்பு..
குழந்தையாக மாற எனக்கு ஆசை வந்தது!
இடும்பை ஏச்சு துரோகம் நேரில் காணும் போது..
சின்னப்பிள்ளையாக
எனக்கு ஏக்கம் வந்தது..!
பள்ளிக்கூட மணியின் ஓசை கேட்ட போது..
பயிற்றிருந்த காலம் எனது கண்ணில் வந்தது
பாசத்தோடு பக்கம் அமர்ந்து மகிழ்ந்துவந்த பக்ருதீன் சூசையப்பன் ஞாபகமும் வந்தது!
தீபாவளி பொங்கல் என்று வந்துவிட்டால்..
தெருவில் வெடித்த ஓலைவெடி கனவில் வந்தது!
வாத்தியாரு கையை நீட்டி அடித்த அடிகளே..
வாழ்க்கையிலே ஏற்றி வைத்தப் படிகளானது!
கணினியிலே எனது பேரன் விளையாடிய போது.. கரும்பலகை சாக்பீசு கண்ணில் நின்றது!
தோளுக்குமேல் அண்ணன் தங்கை தம்பி வளந்தனர்..
தொலைந்து போன உறவுநிலை கண்ணீர் வந்தது!
குழந்தையாக இருந்திருந்தால் குழப்பம் இல்லையே!இது.. வளரவளர யாவருக்கும் புரியவில்லையே!
சண்டைப்போட்டுச் சேத்தி விட்டப் பருவம் போனதே.. காசுப்பணம் கோர்ட் கேசு வழக்கு வந்ததே.!
ஒன்று கூடி தெருவில் ஆடி வாழ்ந்த நாட்களை.. குழந்தைகளை பார்க்கும் போது நினைவில் வந்ததே.!
அன்று போல இன்று இங்கு வாழ்க்கை இல்லையே! அன்றலர்ந்த குழந்தையாக மலர ஆசையே.!
🎪🎪


