ShareChat
click to see wallet page
search
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! தீப விவகாரம் : நீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் கடும் கண்டனம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல், உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் அமைதியாக நடைமுறையில் இருந்து வந்த தீப ஏற்றும் பழக்கத்தை மாற்றி, பழைய தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு, “தமிழக இஸ்லாமிய சமூகத்தின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைத்துள்ளது” என அவர் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் தீபத்தூண் இடையிலான 15–50 மீட்டர் பௌதிகத் தொலைவை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆனால் இந்த அவசர உத்தரவால் “இஸ்லாமியர்–இந்துக்கள் இடையிலான மனதளவிலான தொலைவு விரிவடைந்துவிட்டது” என அவர் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளாக எந்த சர்ச்சையும் இன்றி இருந்து வந்த தீப ஏற்றும் நடைமுறையை நீதிமன்ற அதிகாரம் கொண்டு மாற்றுவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக முனைவர் ச.சு ஜைனுதீன் கூறினார். இது நீதித்துறையின் நடுநிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளதையும் அவர் கவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக தனது பதவியை தவறாக பயன்படுத்து வருகிறார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மேலும், மாநில அரசு மற்றும் அறநிலையத்துறை முன்வைத்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டது, CISF பாதுகாப்பு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது போன்றவை “சமூக உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது” என்றார். தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருந்த மத நல்லிணக்கத்தை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை சீர்கோழிக்கவும் காலம் காலமாக ஒரு தொப்புள் கொடி பிள்ளைகளாக இருந்து வரும் சூழலில் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது கூறினார்.
நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! - ShareChat