#🏫 ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்! 📖 05.09.2025
💐💐🌹🌹💐💐🌹🌹💐💐
மூக்கொழுகும் பிள்ளைக்கும் முகம் கோணா சேவை செய்து..
நாக்கினிலே கல்வி சேர்த்து.. அறிவுத்திறன் வளர்த்து.. மாணவர்
போக்கினிலே.. பல குறைகள் தென் பட்டாலும்..
நீக்கி தினம் நெறி படுத்தும்
ஆசிரியர்கள்...
மாணவரை வடிவமைக்கும்
பட்டறையாம் வகுப்பறையில்..
ஆயுதங்கள் ஏதுமின்றி
அன்பெனும் கருவி ஒன்றே ஆயுதமாய்.. வைத்து..
அருமையாய்.. உரு கொடுக்கும் ஆசிரியர்கள்...
குறும்பு செய்யும் மாணவரை
பொறுத்துக்கொண்டு
அரும்பினிலே.. அவர் குற்றம் நீக்கி விட.. முனைப்புக் காட்டும் ஆசிரியர்கள்..
சில பிள்ளைகள் பாடாய்ப்
படுத்துவார்கள்..
பொறுமைக் கொண்ட ஆசிரியரும் பொங்கித்தான் போவார்கள்...
சில பிள்ளைகள்.. அருமையாய் இருப்பார்கள்..
அவர்கள் தான் நம் மனதிற்கு இனிமை சேர்ப்பார்கள்...
எப்பிள்ளை என்றாலும் நாம் வெறுப்பதில்லை.. அவர்க்கு செய்யும் கடன்கள் நாமும் மறப்பதில்லை..
உலகில் எத்தனை
தொழில்கள் இருந்தாலும்..
ஆசிரியர் தொழிலுக்கு நிகராகாது...
எந்த பெரிய தொழில் என்றாலும்..
ஆசிரியர் தொழில் போல் நிறைவாகாது..
கவலைகள் பல இருந்தாலும்..
மாணவரின் குவளைப்போல் முகம் கண்டால் மறந்து போவோம்...
அவர் செய்யும் குறும்புகளும்..
குறு நகையும் நம்மை
குதூகாலமாய்... மகிழச்செய்ய கற்பூரமாய் கரைந்துப் போவோம்...
எனவே நம் போல பாக்கியவான்கள் யாருமில்லை..
நம்மை தான் இப்பணிக்கு இறைவன் தேர்ந்தெடுத்தார்...
அவர் நம் மீது கொண்ட அன்பிற்கு அளவுமில்லை..
மாணவரை அரவணைப்போம்..
நம் பணியில் நாம் சிறப்போம்...
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. 🙏🌹
ப. சாந்த ராணி. HM

