ShareChat
click to see wallet page
search
"நான் வெறும் Skin Specialist டாக்டர் எம்.நடராஜன் தோல் நோய்களை மட்டும் நீக்குபவன் பெரியவாளோ Kin Specialist உறவு முறையை நன்கு பிணைத்து வைப்பவர்" பெரியவா அவர்கள் Soul doctor ஆத்மாவைப் பிடிக்கும் சம்சாரப் பிணியை அறவே நீக்குபவர். நான் லண்டன் மருத்துவக் கல்லூரியில் சிறப்புக் கல்வி பெற்றவன் பொதுவாகவே சில மாதங்கள் இங்கிலாந்தில் இருந்துவிட்டுத் திரும்பி வந்தவர்கள் நம் நாட்டுக் கலாசாரம் பற்றி இழிவாகப் பேசுவார்கள். யார் செய்த புண்ணியத்தாலோ எனக்கு அப்படிப்பட்ட நிலை வரவில்லை நம்து ஆசார அனுஷ்டானங்கள் பூஜை புனஸ்காரங்களை முழுமையாகப் பின்பற்ற முடியாவிட்டாலும் கூடியவரை அனுஷ்டானத்தில் கொண்டு வந்தேன். அதன் விளைவாக ஸ்ரீவித்யா உபாஸனையில் ஈடுபட்டு பூஜை ஹோமங்கள் செய்து வந்தேன். பெரியவாள் தரிசனத்துக்கு எப்போது போனாலும் என் சொந்த வாழ்க்கை பற்றியும் பெரியவாள் விசாரிப்பார்கள். நீ ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாயா என்று கேட்பார்கள். அது சரி நீயோ மேல்நாட்டில் படித்தவன். அங்கே வாழ்க்கைக்குப் பல சௌகரியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகளை அனுபவித்துவிட்டு வந்த நீ எப்படி வைதிக அனுஷ்டானங்களில் ஈடுபட்டாய் அங்குள்ள மக்களின் வாழ்க்கை இயந்திர ஓட்டம் தான் வெறும் உடலின்பம் பணம் வசதிகள் தான். நமது வாழ்க்கை முறையில் அமைதி இருக்கிறது இன்னும் மனிதப் பண்பாடு இருக்கிறது இன்னும் பசுமையாக இருக்கும் கலாசாரம் ஆன்மிகம் இருக்கிறது. நான் இங்கேயே இருந்திருந்தால் கூட ஆன்மிகத்தில் எனக்கு இவ்வளவு ஈடுபாடு வந்திருக்காது வெளிநாட்டு வாசம் எனக்கு ஒரு வரப்பிரசாதம். பெரியவாளுக்கு என்னுடைய பதில் ரொம்பவும் திருப்தி அளித்திருக்க வேண்டும் ஒரு ஆப்பிளை எடுத்து பந்தாடி என்னை Catch பிடிக்க வைத்தார்கள். நான் அவர்களுடைய திருவடிகளை Catch செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரியவா கனவிலாவது பந்தைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் பழத்தை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
jai mahaperiyava - ShareChat
00:29