ShareChat
click to see wallet page
search
பிக் பாஸ் 9 Day 0 ஆரம்பம் அருமை. பெருசா நீட்டி முழக்காம சிறு சிறு உரையாடலுடன் அறிமுகம் நிகழ்ந்தது. பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் ஒரு சில துறைகளுக்குள் அடங்குகிறார்கள். ஒரு சிலர் சற்று வேறுபட்ட துறையினர். இந்த முறை பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் இழப்பையோ, கடுமையான போராட்டதையோ சந்தித்தவர்கள். எனவே போட்டி போடும் மனப்பான்மை அதிகம் இருக்கும், விளையாட்டுக்கள் உப்பு சப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு குறைவு. வாழ்ந்த வளர்ந்த முறைகள் பெரும்பான்மையினருக்கு வேறுபடுவதால், கருத்துக்களும் செயல்படும் முறையும் சுவாரசியத்தை கூட்டும். பாக்கலாம் எப்படி இருக்க போகுது என்று. எனக்கு ஒரு சில நபர்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் தொடக்கத்திலேயே அதை சொல்லி உங்களுடைய கண்ணோட்டதை மாற்ற விரும்ப வில்லை. #பிக்பாஸ் #பிக்பாஸ் 9