#Trichy Dharma
**************
குவலயம்
மகிழகமாக
மலர்ந்த மலர்கள்
கையில் அள்ளிக்கொஞ்ச
வீட்டில் பூத்த நட்சத்திரங்கள்
மகிழ்விக்கும்
மனோரஞ்சிதங்கள்
பிணக்குற்ற பெற்றோர்
இணக்கமுற
சேர்த்து வைக்கும்
செல்லங்கள்
பாசம்படர
பேசும் குயில்கள்
நேசந் தொடர
பெற்ற நல்வரங்கள்
கோபத்தையும்
பகையாகாமல்
பதிவு செய்யும்
ஆச்சரியங்கள்
பேரன்பை பெருக்கும்
பிரபஞ்ச அதிசயங்கள் !!!
🎪🎪


