ஸ்ரீ (969)🏹🚩இதிகாசங்களை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்? கடினமான சூழல்களிலும் தர்மத்தை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமரின் அவதாரம் என்பது புரியும்.
ஒரு அற்புதமான ஸ்லோகத்தில், ராமர் அவதாரம் எடுத்த மகிமையை கோஸ்வாமி துளசி தாசர் விவரித்துள்ளார். சித்திரை மாதத்தில், வளர்பிறையில், நவமி திதியில், மிகவும் நல்ல முகூர்த்த நேரத்தில், அழகான உருவத்தோடு ராமர் பிறந்தார். அது மதிய நேரமாக இருந்தது. அப்போது அதிக குளிரும் இல்லை, அதிக வெயிலும் இல்லை. அதாவது அது ஒரு அனுகூலமான நேரமாக, புனித காலமாக, அனைத்து மக்களுக்கும் அமைதியைத் தரும் நேரமாக இருந்தது. இப்படிபட்ட ஒரு நாளில்தான் ராமர், அயோத்திய மன்னர் தசரதரின் மகாராணி கௌசல்யாவின் வயிற்றில் இருந்து இந்த பூமியில் அவதரித்தார். ராமர் ஸ்ருஷ்டியை உருவாக்கியவர். அதைக் காப்பவர். அதை அழிப்பவரும் ராமர்தான். ராமரின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை? அவர் கனிவானவர், இரக்கமுள்ளவர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் இரக்கமும் கருணையும் காட்டுபவர்.
உண்மையில் ராமரின் வாழ்க்கை மனிதனுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான முறைகளைக் கற்பிக்கிறது. ராமரின் வாழ்க்கையில் வெறுப்பு இல்லை, விரோதம் இல்லை, க்ரோதம் இல்லை, டாம்பீகம் இல்லை, அகங்காரம் இல்லை. அன்பும் பரிவும் பக்குவமும் மட்டுமே நிறைந்துள்ளது.
படகோட்டியையும் வானரத் தலைவனையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட மன்னன் ராமர். அகலிகைக்கு சாப விமோசனம் அளித்த அன்புள்ளம் படைத்தவர் ராமர்.
உண்மையான ராமராஜ்யம் என்பது அனைவரின் நலனுக்கான விருப்பமே ஆகும். ராமரும் அவரைப் பின்பற்றுபவர்களும் யாரையும் புண்படுத்த நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
தலைவன், அதாவது அரசன், ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என ராமர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆட்சியாளரின் மனம் தாராள மனப்பான்மையோடு இருக்க வேண்டும். அரசனுக்கு அதிக விவேகம் அவசியம். மன்னன் எப்படி இருக்க வேண்டும், மக்களின் நடத்தை என்னவாக இருக்க வேண்டும், இதையெல்லாம் நாம் ராமரின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராமர் பலவீனவானவர்களின் பலம். ஒரு மன்னரின் ராஜ்ஜியத்தில் ஒருவர் கவலையுடன் இருந்தால் கூட அந்த மன்னன் நரகத்தில் இருக்க வேண்டியவன் என்று கருதியவர் ராமர்.tks nalini gopalan
#பெருமாள்


