ShareChat
click to see wallet page
search
காசியில் நவராத்திரி கோயில்கள்! காசி மாநகரில் நவராத்திரிக்கு உரிய தெய்வங்கள் அனைவரையும் அங்கு உள்ள கோயில்களில் தரிசிக்கலாம். 1.காசியில் வருணை நதிக்கு அருகில் சைலபுத்ரி (மலைமகள்) கோயில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாள் இந்த துர்கையை வழிபடுகிறார்கள். 2-ஆம் நாளன்று துர்காகாட் படித்துறை அருகே உள்ள பிரம்மசாரிணி கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். 3-வது நாளன்று சௌக் கடைத் தெரு அருகே உள்ள சித்திரா கண்டா அம்மன் கோயிலில் அருள் புரியும் ‘சந்திரமணி தேவி’யை வழிபடுகிறார்கள். 4-வது நாளன்று சௌக் கடைத் தெருவில் உள்ள கூஷ்மாண்டா என்ற திருக்கோயிலில் உள்ள கூஷ்மாண்டா அம்மனை வழிபடுவர். 5-வது நாளன்று ஜைத்புரா பகுதியில் உள்ள ஸ்கந்த மாதா என்கிற வாகீஸ்வரி அம்மனை வழிபடுவர். 6-வது நாளன்று ஆத்மவிஸ்வேஸ்வரர் கோயிலின் பின்பக்க நுழைவாயிலை ஒட்டியுள்ள சுற்றுச் சுவரில் இருக்கும் காத்யாயினி அம்மனை தரிசிப்பார்கள். 7-ஆம் நாளன்று காளிகா பகுதியில் உள்ள காளராத்ரி துர்கையை தரிசிப்பார்கள். இவள் கழுதையை வாகனமாகக் கொண்டவள். 8-வது நாளன்று காசியின் புகழ்பெற்ற அன்னபூரணியை தரிசிப்பர். இவளை மகா கௌரி துர்கை என்றும் அழைக்கின்றனர். 9-ஆம் நாளன்று காசி சித்தாத்ரி சங்கடா கோயிலின் அருகே உள்ள மடம் ஒன்றில் இடம் பெற்றுள்ள ‘ஸித்தி மாதா’ அம்மனை வழிபடுவர். இவளின் விக்கிரகத்துக்குக் கீழே உள்ள வெள்ளித் தொட்டி ஒன்றில் சிவலிங்கம் உள்ளது. இந்த அம்மன்கள் ஒன்பது பேரும் காசியில் பிரசித்தமானவர்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 10-ஆம் நாளான விஜயதசமி அன்று துண்டி விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர்- மற்றும் அன்னை விசாலாட்சியை தரிசிப்பார்கள் 🚩🕉🪷🙏🏻 #நவராத்திரி #நவராத்தி நல்வாழ்த்துக்கள் #வசந்த நவராத்திரி #வாராஹியின் ஆஷாட நவராத்திரி விழா #சியாமளா நவராத்திரி மூன்றாம் நாள்
நவராத்திரி - HAPPY NAVRATRI HAPPY NAVRATRI - ShareChat