#📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
ஆறுபடைவீடுகளில் முதல் வீடாக இருப்பதால் திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே முருகனுக்கு மட்டுமே சொந்தமானது என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
திருத்தணி, சுவாமிமலை போல அல்லாமல் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பலரை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
♦ தெற்குப்புறமாக முருகன்
♦ அதற்கு மேல் பிள்ளையார்
♦ வட மேற்கில் காசி விசுவநாதர்
♦ வட கிழக்கில் சிக்கந்தர்
என்று நாலு பேர் இருக்காங்க.
இவர்கள் மட்டுமல்லாமல் சமணர்களின் வழிபாட்டு இடங்களும் சிற்பங்களும் இருக்கின்றன.
பெரும்பாலான வெளியூர்க்காரர்கள் முருகனை தரிசிப்பதாேடு சரி. மலையை சுற்றி வந்து முருகனுக்கு பின்னாடியிருக்கும் மலைப்படிக்கட்டுகளில் முட்டி வலிக்க மேலேறி காசி விசுவநாதரை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இன்னும் கேட்டால் அப்படி ஒருவர் இருப்பதே பலருக்கும் தெரியாது.
காசி விசுவநாதரின் திருப்பரங்குன்ற இருப்பே தெரியாதவர்களுக்கு அங்கே சிக்கந்தர் இருப்பதா தொல்லையாக இருக்க முடியும்?
ஆக உள்ளூர் விவகாரமும் தெரியாமல், ஒட்டுமொத்த மதவாத அரசியலும் புரியாமல், விளக்கு இருக்கு, தூண் இருக்கு, அதில் மூன்று லிட்டர் எண்ணெய் ஊத்துவது வழக்கம் என்றெல்லாம் வாந்தி எடுக்காமல் நீங்களும் நிம்மதியா இருங்க, மத்தவங்களையும் நிம்மதியாக இருக்க விடுங்க.


