ShareChat
click to see wallet page
search
பூஜ்ய ஸ்ரீ மஹா பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள் அப்பொழுது அங்கு பெரிய கட்டடங்களோ மற்ற வசதிகளோ செய்யப்படவில்லை. ஸ்ரீ மஹாபெரியவாள் அங்குள்ள சின்னக்கோயிலின் முன்புறம் திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். இரு நண்பர்கள் தரிசனத்திற்காகச் சென்று இருந்தார்கள் அதில் திருச்சி நண்பர் திருவானைக்காவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஒரு அஷ்டோத்ர தங்கக்காசு மாலை செய்திருந்தார். அந்த மாலையைப் பெரியவாளிடம் காண்பித்து அனுக்ரஹம் பெறச் சென்றிருந்தார்கள். பெரியவாள் அந்தத் தங்கக் காசு மாலையை வாங்கிப் பார்த்து தன் சிரஸில் வைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டு ஆசீர்வதித்தார். மஹாபெரியவா யாரேனும் மாலை கொண்டு வந்து சமர்ப்பித்தால் அதை தன்னுடைய சிரசில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். இதன் தாத்பர்யம் தனக்கு என்று ஒன்றையும் ஏற்றுக் கொள்ளாமல் அம்பாளுக்கு அர்ப்பணித்ததாகப் பாவித்து அம்பாளின் பிரசாதமாகக் கருதி அதை சிரசில் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். திருச்சி நண்பரிடம் நீ அம்பாளுக்குக் காசுமாலை செய்து வைத்திருக்கிறாய் எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டார்கள் பெரியவா ஒன்றும் புரியவில்லை. பெரியவாள் சொல்கிறார் இங்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பித்தளைக் குடம் வைத்திருந்தேன் அதைத் திருடன் கொண்டுபோய் விட்டான். யாரும் எடுத்துப் போகாதவாறு ஒரு மண்குடம் தினமும் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வாயா என்றார்கள் அந்த கைங்கர்யம் சில காலம் நடந்தது. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
jai mahaperiyava - ShareChat
00:29