*பைரவர் ஆலயங்கள்*
*திருவாய்மூர்* *ஆலயத்தில்*
*அருள் பாலிக்கும்*
*காசிக்கு இணையான* *அஷ்ட பைரவர்கள்*
திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில்.
காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர்.
ஆனந்த பைரவர்,
அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இந்த ஆலயத்தில்
இருந்ததாகக் கூறுவர்.
ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன.
மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான்.
இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார்.
அதன்படி, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இத்தல பைரவர்களை ருத்னாபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், தோஷங்களின் காரணமாக தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இத்தல பைரவர்களை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால், வறுமை நீங்கி வளம் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இத்தல பைரவர்களை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும்.
மற்றும் இத்தல பைரவர்களை
வழிபடுவதன் மூலம், இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.
வியாபாரம் அபிவிருத்தி அடையும்.
திரியம்பகாஷ்டமி என்பது பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்.
திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது.
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் இத்தல பைரவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி, எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.
திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்து மூலமாகவும் செல்லலாம்.
திருவாய்மூர் ஆலயம்
அருள் பாலிக்கும்
அஷ்ட பைரவர்கள் படம் கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #அஷ்ட பைரவர் பைரவர் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔