எவ்வளவு காத்து அடிச்சாலும் சாயாத சக்கை வாழை _ Marketing -க்கும் பிரச்னை இல்லை _ Pasumai Vikatan
#bananafarming #organicfarming #banana
#banana #bananafarming #organicfarming
வாழையில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில ரகங்களுக்கு அந்தந்த பகுதியைப் பொறுத்து பிரகாசமான சந்தை வாய்ப்பும் உத்தரவாதமான விலையும் கிடைக்கிறது. அதனைச் சரியாக அடையாளம் கண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரும்பாலும் ஏமாற்றம் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், தென்காசி மாவட்டம், பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணியன். இவர், ‘பஜ்ஜி’ வாழை என அழைக்கப்படும் ‘மொந்தன் ரக வாழை’யை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.