மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள்.
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
*நன்மையினால் நிரப்பும் தேவன்*
எனக்கு அன்பானவர்களே,
ஆம், தேவன் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். உங்களுக்குப் பெரிதான நன்மையை தந்து ஆசீர்வதிக்க அவர் விரும்புகிறபடியால், தம்மில் அடைக்கலம் கொள்ளும்படி அவர் உங்களை அழைக்கிறார். நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு பெரியவர்! தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே ஆண்டவர் விரும்புகிறார். உங்களை வாழ்க்கையில் செத்துப்போனவை என்று நினைக்கிறவற்றையும் ஜீவனோடு எழுப்ப ஆண்டவர் இன்றைக்கு ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்!
லாசருவின் வாழ்க்கையில் தேவனுடைய உயிர்த்தெழுந்த வல்லமை வெளிப்பட்டதை வேதத்தில் காண்கிறோம். லாசரு மரித்துப்போனான்; அவனுடைய சகோதரிகள் இருவரும் அழுது தவித்தனர். 'மீண்டும் நம் சகோதரனை காணமுடியாது; அவன் வாழ்க்கை முடிந்துபோயிற்று' என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இயேசு வந்து லாசருவை மீண்டும் உயிரோடு எழுப்பினார். சுற்றிலுமிருந்த ஜனங்களும் லாசருவின் வாழ்க்கை முடிந்துபோயிற்று என்று எண்ணியிருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் வித்தியாசமானதொரு திட்டத்தை வைத்திருந்தார். தம் பிள்ளைகளுக்கு நல்லவராக இருக்கவும், அவர்களை நன்மையினால் நிரப்ப அவர் விரும்பினார்.
நீங்கள் இன்று இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். 'உன் வாழ்க்கை முடிந்துபோயிற்று; இனி ஒரு நன்மையும் கிடைக்காது' என்று சுற்றியிருப்பவர்கள் கூறலாம். உங்களை பெற்றவர்கள் கூட அப்படிச் சொல்லக்கூடும். "நீ ஒன்றுக்கும் உதவாதவன்(ள்)" என்று மற்றவர்கள் உங்கள் காதுகேட்க சொல்லலாம். மனங்கலங்காதிருங்கள். எல்லா நன்மையையும் உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிக்க தாம் காத்திருப்பதாக தேவன் கூறுகிறார். ஆவர் எல்லாவற்றையும் உங்களுக்காக வைத்து வைத்திருக்கிறார். அவரில் அடைக்கலம் காணுங்கள்.
ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்


