ShareChat
click to see wallet page
search
#🔶பாஜக #✌️அ.தி.மு.க #தெரிந்துகொள்வோம் # #திருப்பரங்குன்றம்/ தொடர்பாக நேற்று ஹை கோர்ட்டில் நடந்த வாதத்தில்... சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர்... தனி ஜட்ஜ் ஜி ஆர் சாமிநாதனின் தீர்ப்பை உடைத்து தூள் தூளாக்கும் மிகவும் அறிவுப்பூர்வமான மிக மிக முக்கியமான வாதங்களை முன் வைத்தார். அது எந்த ஊடகத்திலும் வரவும் இல்லை. (கோர்ட்டின் வெப்சைட் ஆன live law தளம் மட்டுமே வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கமெண்டில்).அவரின் வழக்கை உடைக்கும் வாதங்களை ஏனோ இரண்டு ஜட்ஜ் பெஞ்ச் பொருட்படுத்துவே இல்லை. அது என்ன..?! இனி... live law தளத்தில் கூறப்பட்டு உள்ளவை: ########## தர்காவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி. மோகனும் அமர்வு முன் தனது வாதங்களை முன்வைத்தார். தனி நீதிபதியின் விளக்கு ஏற்ற அனுமதி அளித்த ஆரம்ப உத்தரவை எதிர்த்து தர்கா மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "தர்கா மேல்முறையீடு செய்யவில்லை" என்று நீதிபதி கருதுவது சரியல்ல என்றும் தர்கா தரப்பில் வக்கீல் மோகன் வாதிட்டார். திங்கட்கிழமைதான் தர்கா வழக்கில் கொண்டுவரப்பட்டதாகவும், அதே நாளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மோகன் கூறினார். " நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன், மேல்முறையீடு செய்ய விரும்புகிறேன். ஆனால் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று நீதிபதி கருத முடியுமா..?" என்று மோகன் கேட்டார். முதலில் கோவில் தரப்பை விளக்கை ஏற்றச் சொன்ன நீதிபதி, பிறகு மனுதாரர்களை ஏற்றச் சொன்னதன் மூலம், அவர் உத்தரவை மீண்டும் அவரே மாற்றி எழுதியுள்ளார் ," என்று மோகன் கூறினார். இந்த வழக்கில் தர்கா நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் மோகன் வாதிட்டார். இதற்குத்தான், மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டி(இது மட்டும் எல்லா ஊக்கத்திலும் வந்தது), "வருடத்தில் ஒரு நாள் விளக்கு ஏற்றுவதால் உங்கள் தரப்பு எவ்வாறு பாதிக்கப்படும்?" என்று ஜட்ஜ் கேட்ட போது, ​​ அப்போதுதான் வழக்கறிஞர் மோகன், இந்த வழக்கையையே உடைத்து நொறுக்கும் வாதம் ஒன்றை முன்வைத்தார். "தீபத்தூண்" என்று தனி ஜட்ஜ் பெயரிட்டு கூறி உள்ள ஒன்று... உண்மையில் ஒரு மதம் சார்ந்த கட்டுமானம் அல்ல என்றும், அது வெறும் ஒரு #சர்வே_கல்_தூண் என்றும் கூறினார். முந்தைய பல்லாண்டு கால வழக்குகளிலும் கூட தீபத்தூண் பற்றி யாரும் எங்கேயும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். இது அவர்கள் தரப்பின் மத ரீதியான கட்டுமானமம் அல்ல. அது ஒரு நில அளவை சர்வே கற்கள் கொண்ட தூண். இதுபோன்ற 6 சர்வே கற் தூண்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளன. முந்தைய வழக்குகளில் கூட, இதுபோன்ற எந்த தீபத்தூண் பற்றியும் யாரும் பேசப்படவில்லை. இந்த வழக்கில் நாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளோம் ," என்று மோகன் கூறினார். ######### இதுபற்றி ஜட்ஜ்கள் கொஞ்சம் இணையத்தில் தேடி இருந்தால்... தீர்ப்பு... ஜி ஆர் சாமிநாதனுக்கு எதிராக அமைந்து... அவர் இரு ஜட்ஜ் பெஞ்ச்சால் கண்டிக்கப்பட்டு... நேற்று தமிழ்நாடு அமைதியாக இருந்திருக்கும். மதுரை போலீஸ் எல்லாம் நிம்மதியாக அவரவர் வீட்டில் ஓய்வு எடுத்திருப்பார்கள். ஆனால்... வக்கீல் மோகன் சொன்ன தகவல்களை நான் இணையத்தில் தேடி... என் அறிவை வளர்க்கப் படித்தேன். அவற்றை உங்கள் முன் வைக்கிறேன். தர்கா அருகே இரு புறமும் அது போன்ற சர்வே தூண் உண்டு. தர்கா அருகே ஒன்று சிதிலமடைந்து சாய்ந்து விழுந்து விட்டது. தூண் இருந்த அடித்தளம் மட்டுமே இருக்கிறது. அவற்றை மாநில அரசு அதிகாரிகள் காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்க்கிற #படம்_1 ஐ பாருங்கள். தர்கா அருகே உள்ள இன்னொன்று சர்வே கல் தூண் விழாமல் இன்னும் மலை விளிம்பில் நிற்கிறது. காரணம், அதளபாதாள பள்ளத்தாக்கு என்பதால்... தர்கா வரும் மக்கள் யாரும் அதன் அருகில் சென்று சாய்ந்து அமராத காரணத்தால், அந்த பழங்கால சர்வே கற்தூண் இன்னும் நிற்கிறது. பார்க்க: #படம்_2. அதில்... நில அளவை குறியீடுகள் எல்லாம் உள்ளன. இந்த சர்வே கற் தூண் எதற்காக என்று மேலும் இணையத்தில் தேடினேன். நில அளளை சர்வேயர்கள் பயன்படுத்தும் கருவியின் பெயர்... #theodolite #தியோடோலைட் என்று பெயர். பார்க்க #படம்_3. தியோடோலைட் என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள கிடைமட்ட மற்றும் செங்குத்து கோணங்களை அளவிடப் பயன்படும் ஒரு துல்லியமான ஒளியியல் கருவியாகும். இது ஒரு முக்காலியில் பொருத்தப்பட்ட தொலைநோக்கியைக் கொண்ட ஒரு ஆய்வுக் கருவியாகும், இது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் சுழல முடியும். தியோடோலைட்டுகள் கட்டுமானம், பொறியியல் மற்றும் வானிலையியல் மற்றும் ராக்கெட் ஏவுதல் போன்ற பிற பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இருக்கருவியை உயரமான முக்காலி மீது அமைத்து அதனை முகத்துக்கு நேராக வைத்து நின்று கொண்டு அல்லது சில நேரம் மலைப்பாங்கான இடத்தில் உயரம் போதவில்லை எனில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று கூட சர்வேயர்கள் அந்த கருவி மூலம் நில அளவையை செய்வார்கள். பார்க்க #படம்_4 தற்போது தரை சமமாக இல்லா விட்டாலும் முக்காலியின் மூன்று கால்களின் உயரத்தையும் ரசமட்டம் பார்த்து ஸ்க்ரூ திருகாணி மூலம் உயரங்கள் வெவ்வேறாக மாற்றி அமைக்க முடியும். அந்த காலத்தில் இந்த ஹைட் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாத சூழலில்... முக்காலியின் ஏதாவது ஒரு காலுக்கு கல் வைப்பார்கள். அல்லது குழி தோண்டுவார்கள். அதன் மூலம் ரசமட்டம் பிடிப்பார்கள். பலமான காற்று வீசும் மலைச்சரிவு பாறையில் இந்த... ஆபத்தான முறையில் நொடிக்கும் மர முக்காலி மீது கருவியை வைக்காமல் கொஞ்சம் உறுதியான அடித்தளம் போட்டு கற்தூண் அமைத்து அதன் உச்சியில் கொஞ்சம் பள்ளம் வெட்டி... குழி போன்று அமைத்து... அதன் உள்ளே இந்த தியோடோலைட் கருவியை ஆடாமல் அசையாமல் பொருத்தி... தூணை சுற்றி அமைக்கப்பட்ட... நாற்புற படி போன்ற அடித்தளத்தில் ஏறி நின்று அக்காலத்தில் சர்வே செய்துள்ளனர். இந்த தூணுக்கு சரியான பெயர்... #triangulation_station. திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல... ஸ்பெயின் மற்றும் ஹாங்காங் நாட்டு மலைகளில் கூட இந்த சர்வே தூண்கள் உள்ளன. பார்க்க #படம்_5 இதை #முக்கோணவியல்_நிலையம் என்போம். முக்கோணவியல் எனப்படும் பெரிய அளவிலான சர்வே மேப்பிங் செயல்முறையின் ஒரு பகுதியாக,அருகிலுள்ள பிற தூண்களுக்கு கோணங்களை அளவிடுவதற்கான நிலையான, நிலை அடித்தளத்தை வழங்க, ஒரு முக்கோணத் தூணின் மீது ஒரு தியோடோலைட் கருவி அக்காலத்தில் வைக்கப்பட்டது . ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, ஒரு நாட்டின் வடிவம் மற்றும் அளவை (எ.கா., ஆர்ட்னன்ஸ் சர்வேயின் கிரேட் பிரிட்டன்) துல்லியமாக தீர்மானிப்பதே இந்த அமைப்பின் முதன்மை செயல்பாடாகும். இப்படியான கல் தூண்... கருவிக்கு துல்லியமான உறுதியான அடித்தளத்தை வழங்கியது, அளவீட்டில் பிழைகளைக் குறைத்தது. தொலைநோக்கியில் கட்டமைக்கப்பட்ட மிகவும் துல்லியமான நீட்சி கருவியான தியோடோலைட், அது இருந்த தூணுக்கும் சுற்றியுள்ள குறைந்தது இரண்டு புலப்படும் தூண்களுக்கும் இடையிலான கிடைமட்ட மற்றும் செங்குத்து கோணங்களை அளவிடப் பயன்படுத்தப்பட்டது. அதில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகருகே உள்ள ஒரு சர்வே தூண்களில்... ஒருபக்கம் உள்ள சர்வே தூண் விழுந்து அடித்தளம் மட்டும் எஞ்சி இருக்க இன்னொரு பக்கம் உள்ள தூண் இன்னும் செங்குத்தாக நிற்க அதன் மேலே கருவி வைக்கப்பட்டு பொருத்தப்படும் குழி எண்ணெய் ஊற்றும் குழியாக காவி கண்களுக்கு தெரிகிறது. எப்படி... வட நாட்டில்... பழங்கால பள்ளிவாசல் உள்ளே ஒழு செய்ய கட்டப்பட்ட நீர்த்தொட்டி நடுவே உள்ள... துளைகள் இடப்பட்ட வாட்டர் ஃபவுண்டைன் நீர் குழாயை "லிங்கம்" என்று கூறி பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தார்களோ... அதே போல... இப்போது சர்வே செய்கிற தியோடோலைட் கருவியை பொறுத்தும்... முக்கோணவியல் கற் தூண் நிலையத்தை... தீபத்தூண் என்று பெயரிட்டு மலையை பூட்டி சீல் வைக்கும் வேலையை துவங்கி விட்டதாக பார்க்க முடிகிறது. இன்று GPS வந்து விட்டதால்... இந்த சர்வே தூண் இதெல்லாம் பல்லாண்டுகளாக பயனின்றி வீணாக கிடக்கிறது. இதற்கு புதுப்பெயர் சூட்டி... மக்களை முட்டாளாக்கி தமிழ் நாட்டையே அல்லோல கல்லொல படுத்தி கலவர சூழலில் கொண்டு போய் நிறுத்தி... காவலர்களை தாக்கி... பொதுச் சொத்துக்கு சேதம் உண்டாக்கி... போலீஸையும் அவர்களுக்கு இராணுவத்தையும் எதிர் எதிராக சண்டைக்கு நிறுத்தி... இன்று பிரச்சினை டில்லி சுப்ரீம் கோர்ட்டு போயி நீதி கேட்கிற நிலையில்... நாட்டில் எவ்வளவு முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேச வேண்டிய நாடாளுமன்ற இரு அவைகள்... இன்று மக்கள் நிம்மதியாக வாழ வேண்டிய சூழல் பற்றி விவாதிக்க வேண்டிய தேவையற்ற இக்கட்டு ஏற்பட்டுள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
திருப்பரங்குன்றம்/ - 0 24 024 _ 0 24 024 _ - ShareChat