நேற்று 27-09-2025 கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தியறிந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் இன்று 28-09-2025 கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் உறவுகளையும் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, விரைந்து நலம் பெற்று வர அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
https://www.youtube.com/live/9S3hQr_EPWo?si=2Y2d-KjQ81GlAXRY
#KarurStampede | #STAMPEDE | #Karur | #TVKVijay #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி


