கார்த்திகை தீப திருநாளன்று எல்லாருக்கும் திருவண்ணாமலை தீப தரிசனம், எனக்கோ அதே இடத்தில் கைலாய மலை தரிசனம்!! 😄😂. ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார் - எங்கும் நிறைந்த இறைவன் பக்தர்களுக்காக குளிர்ந்து ஒரு இடத்தில் பனிக்கட்டியாக ஆவதே உருவக் கடவுள்! அது போல், மற்றவர்களுக்கு அடிமுடி தெரியாத நெருப்பு, எனக்கோ குளிர்ந்த கைலாய தரிசனம்!! 😄😄😂😂
https://www.youtube.com/live/KFkAvLQc4I8?si=zw_kZsHCIJy2o_fy
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம ************************************************. தினமும் ஏதாவது தமிழ் நியூஸ் சேனல்களில் தலைப்பு செய்திகளை மட்டும் யூடியூபில் பார்ப்பது வழக்கம். ஐந்து நிமிட தலைப்பு செய்திகளில், புயல் மழை இருந்தாலும் கூட, "குற்றால திற்பரப்பு அருவியில் இன்றைக்கு கூத்தடிக்க அனுமதிக்கிறார்களா? இல்லையா?" என்பதும், "தங்கம் விலை எவ்வளவு?" என்பதும் தான் தினமும் தலைப்பு செய்திகளாம்!! ஐந்து நிமிடத்திற்கு கூட வேறு முக்கிய செய்திகள் இல்லையா?! (தங்கம் என்ன தினமும் மக்கள் வாங்கும் காய்கறியா? பருப்பு திடீரென பார்த்தால், அமேசானில் மட்டும் அதே கிலோ 220 ரூபாய், மளிகை கடையில் 130 ரூபாய்க்கு குறைந்து விட்டது; இந்த மாதிரி அத்தியாவசிய விலை அல்லது ஆன்மீக செய்திகளையாவது (ஆன்மீக ராசி பலன் அல்ல!) தினமும் கூறலாம்). ஆகையால், அவற்றை எல்லாம் விட்டு விட்டு DD தமிழ் நியூஸ் சேனலில் பார்க்கலாம் என்று திருவண்ணாமலை லைவ் பார்த்ததால் வந்த விளைவு!! கடைசி வரை தீபத்தை காண்பிக்கவே இல்லை!! கமெண்டரி சொல்பவராவது மேகமூட்டம் தெரியவில்லை என்று கூறுவார் என்று பார்த்தால் அவரும் ஏதோ தீபத்தை தரிசிப்பது போல் கைலாய காட்சி என்று வர்ணிக்கிறார்!! 😄😄😂😂
00:51

