#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மஸ்ஜிதே ரஹ்மானியாவில் மாணவர்–பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் வளாகத்தில் 07.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மாதாந்திர இஸ்லாமிய கல்வி மற்றும் உலகக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறப்பட்டது.
கூட்டத்துக்கு மௌலானா மௌலவி ஹா. முஹம்மது ஜாவிது பெற்றோர்கள், மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி ஏ. கே. எம். காதர் மைதீன், பொருளாளர் ஹாஜி கே. ஏ. மைதீன் பாட்ஷா, நிர்வாகிகள் ஜே. எம். எஸ். காஜா, ஜே. எம். எஸ். முஹம்மது ரஃபீக் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக புது பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஏ. ஷேக் தாவூத், முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், நவாப் பள்ளிவாசல் மேலாளர் யாசின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்.
மாணவர்களின் மதக் கல்வி, சாதாரண கல்வி மற்றும் பெற்றோர் பொறுப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டத்தில் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


