#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
*12-ஆம் பகுதி "சிவ வேடம்" என்பது, புறத்தோற்ற வேடங்கள் அல்ல; இறைவனை உணர்ந்து, அவனோடு ஒன்றி, பற்றற்று, கர்ம வினைகளை நீக்கி, தூய்மையான மனதுடன் இருக்கும் அடியவர்களின் நிலைதான் உண்மையான சிவ வேடம் என விளக்குகிறது. இந்த அடியவர்களின் செயலற்ற தன்மையே இறைவனின் வேடமாகிறது*.
பாடல் வரிகள் :
*12. சிவ வேடம்*
1676 அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1
1677 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 2
1678 மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 3
1679 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

