ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)🏹🚩~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பகவான் என்ற சொல் ஔபசாரிகமாக யாரைக் குறிக்கும் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.)”பூதம் ஸரஶ்ச மஹதாஹ்வய“ எனும் தனியனில் பொய்கையாரை முன்னே பாடாமல் பூதத்தாரை பாட என்ன காரணம் ? 2.)சிறந்தார் யார் ? 3.)தீர்த்தகரர் யார் ? 4.)திருமலையில் காணப்படும் இளங்கிரி என்பது எது ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பகவான் என்ற சொல் நிரூபாதிகமாக ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனை மட்டுமே குறிக்கும். ஆயினும் ஔபசாரிகமாக அது பலரைக் குறிக்கும். ஸ்ரீபாஷ்யத்தில் அதோ ப்ரஹ்மஶப்தஸ் தத்ரைவ முக்யவ்ருத்த: தஸ்மாத் அன்யத்ர தத்குணலேஶயோகாத் ஔபசாரிக: அநேகார்த்த கல்பனாயோகாத் பகவச் சப்தவத் | பொருள்: ப்ரஹ்மம் எனும் சொல் புருஷோத்தமனை(கண்ணன் எம்பெருமான்) மட்டுமே குறிக்கும். மற்றையோருக்கு என்றால் அந்த புருஷோத்தமனின் குணங்கள் எனும் ஞானம்-ஐஶ்வர்யம்-பலம்-ஶக்தி-தேஜஸ்-வீர்யம் இவற்றில் கோடானுகோடி பங்கிலே ஒரு பங்கு இருக்கும் காரணத்தால் ஆகும். உதாரணமாக பகவான் என்னும் சொல்லைப் போல. சிறந்தார்க்கு எழுதுணையாம் செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் அறந்தாங்கும் மாதவனே என்னும் மனம்படைத்து மற்று அவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு – இரண்டாம் திருவந்தாதி-44 இங்கே ஆழ்வார் சிறந்தார் என யாரைக் குறிப்பிடுகிறார் ? ஔபசாரிக பகவான். தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிரும்சோலை மணாளனார் – நாச்சியார் திருமொழி இங்கே ஸ்ரீநாச்சியார் தெள்ளியார் பலர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் ? ஔபசாரிக பகவான். ஔபசாரிக பகவான் யார் ? உதாரணமாக அடியேன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். எங்கள் தேவபெருமாளுக்கு ஆகமநூல் என்பது பாஞ்சராத்ர ரத்னத்ரயங்களில் ஒன்றான ஜயாக்ய ஸம்ஹிதை. இதன் ஆசிரியர் ஶாண்டில்ய மஹரிஷி. எனவே ஶாண்டில்ய மஹரிஷி ஒரு ஔபசாரிக பகவான் அல்லது தெள்ளியார்(நாச்சியார் திருமொழி) அல்லது சிறந்தார்(இரண்டாம் திருவந்தாதி). பரம ஸம்ஹிதையின் ஆசிரியர் மார்கண்டேய மஹரிஷி. எனவே அவரும் ஒரு ஔபசாரிக பகவான். அஹிர்புத்ன்ய ஸம்ஹிதையின் ஆசிரியர் துர்வாஸ மஹரிஷி. எனவே அவரும் ஒரு ஔபசாரிக பகவான். அதாவது ஔபசாரிக பகவான் என்றால் லக்ஷணம் யாது ? 1.)மாதவனே என்னும் மனம்படைத்து -------------------------------------------------- இங்கே மனம் என்று சொன்னது சங்கல்ப விகல்பங்களை செய்யும் அந்தகரணம் அல்ல. மாறாக செயல்களுக்கு காரணமான அஹங்காரம் அல்லது அபிமானம். திருமகள் கேள்வன் என்ன திருவுள்ளத்தில் நினைக்கிறானோ அதையே தலையில் கொண்டு செய்கிறவன் என்று பொருள். தனக்கொரு அஜென்டா இல்லாமல் கண்ணனின் அஜென்டா என்னவெனத் தெரிந்து செய்பவன். கண்ணன் எம்பெருமானுக்காக மட்டுமே தனது கரணங்களான புலன்களையும் கலேவரமான உடலையும் பயன்படுத்துபவன் என்று பொருள். 2.)மற்று அவன் பேர் ஓதுவது --------------------------------------- திருமகள் கேள்வனின் பல்வேறு நாமங்களுக்கு ஸ்தூலம், ஸூக்மம், பரம் என்று ஆழமாக ஸஹஸ்ரநாமங்களுக்கும் பொருள் தருவது பாஞ்சராத்ர ஸம்ஹிதைகள். எனவே அவைகளை அறிந்தவன். அறிந்து பொருளுடன் பாடுபவன் என்று அடுத்த லக்ஷணம். அதாவது பாஞ்சராத்ரம் சொன்ன ஞானம்,யோகம்,சரியை,கிரியை கற்று பெருமாள் கைங்கர்யம் செய்பவன் என்பதாகும். சரி இவர்களால் என்ன பயன் ? சொல்கிறேன் பண்டு இப்பெரும்பதியை ஆக்கிப் பழிபாவம் கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண்திசையும் பேர்த்தகரம் நான்கு உடையான் பேர் ஓதிப் பேதைகாள் தீர்ததகரர் ஆமின் திரிந்து – இரண்டாம் திருவந்தாதி-14 வயிறு வளர்க்க உலகில் வாழும் பாமர மக்கள் கீழோர். மாறாக மேலோர் என்பவர் நான்கு கரங்களில் சங்க சக்ர கதை பத்மம் கொண்ட மாதவனின் பேரை ஓதி எட்டுதிசைகளுக்கும் திரிந்து பாவப்பட்ட ஆத்மாக்களை கடைத்தேற்றும் தீர்த்தகரனே ஔபசாரிக பகவான். இதுவே இப்பாசுர அர்த்தமாகும். விஶ்வாமித்ரர், பராஶரர், வேதவியாசர், நாரதர், ஸனத்குமாரர், சுகமஹரிஷி, வால்மீகி ………..போதும் போதும் லிஸ்ட் பெரிஸ்ஸா போயிட்டே இருக்கு. உதாரணமாக குந்திக்கு உதவிய துர்வாசர். த்ரிசங்கு, சுநச்சேபன் ஆகியோருக்கு உதவிய விஶ்வாமித்ரர் பரீக்ஷித்துக்கு உதவிய சுகர் துர்வாசர் ஒருசமயம் கண்ணன் எம்பெருமான் இட்ட பணிகளை செய்துவந்தார். அவருக்கு உதவியாக ப்ருதா என்னும் உக்ரசேனர் மகளை உதவியாக வைத்துக் கொண்டார். அவருடைய பணி இனிதே நிறைவடைந்தது. ப்ருதாவின் பணிவிடைகளால் மனம் குளிர்ந்த துர்வாச பகவான் –“மகளே உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுக் கொள்!” என்றார். அவளும் நான் ஒரு சிறு பெண். எது ஶ்ரேயஸ் என்று அறியாதவள். எனக்கு எது ஶ்ரேயஸோ அதனை பகவானான நீரே அறிந்து தாரும் என்றாள். பகவான் முக்காலமும் அறிகிறார். அதாவது ஸத்யகாமத்வம் எனும் குணமும் ஸத்யஸங்கல்பத்வம் எனும் குணமும் ரிஷிகளுக்கு உண்டு. எனவே அவர் எதிர்காலத்தை அறிகிறார். அவள் எதிர்கால கணவன் பாண்டுவிற்கு பிள்ளைப்பேறு இல்லாமல் போகப் போவதை அறிகிறார். எனவே ப்ருதைக்கு –“நீ எந்த தேவனை இச்சித்து, மகப்பேறு கேட்கிறாயோ, அந்த தேவனால் உனக்கு மகப்பேறு உண்டாகும்” என சொல்லி விடைபெறுகிறார். எனவே வாழ்ந்தால் இப்படி பூதத்தாழ்வார் சொன்னது போல வாழ வேண்டும். சும்மாவா ஸ்வாமி பராஶர பட்டர் தனியன் அருளினார் ! “பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத பக்திஸார குலசேகர யோகிவாஹாந்” முன்னவரான பொய்கையாரை முதலில் சொல்லாமல் பூதத்தாரை ஏன் சொல்லவேண்டும் ? கலஹம் செய்தால் உலகிற்கு நன்மை என அவ்வாறு வேண்டுமென்றே செய்தார் பட்டர். பூ-ஸத்தாயாம் (இருத்தலில்) ! ஒரு மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் ? நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என்று பிரியாது பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு – இரண்டாம் திருவந்தாதி-53 திருமலையில் திருவேங்கடத்தானின் பக்தசிரோன்மணியர் மஹாயோகியராய் வாழ்கின்றனர். அவர்களை மானஸ ஸாக்ஷாத்காரத்தால் மகிழ்விக்கிறான் திருவேங்கடத்தான். பல்வேறு அவதார லீலைகளை காட்டுகிறான். பல்வேறு விஷயங்களை அவர்களுடன் சம்பாஷணை செய்கிறான். எனவே அவர்களும் யோகத்திலேயே தன்னை மறந்து காலமும் மறந்து அமர்ந்து விட்டனர். வருடக்கணக்கில் ஆனதால் அவர்களின் ஜடை முன்னே தொங்குகிறதாம். அது ஒரு ஜங்கம வஸ்து என செடிகொடிக்கள் அவர் மீறி ஏறி வளர்ந்து விட்டனவாம். இது பார்ப்பதற்கு இளங்கிரி எனத் தெரிகிறதாம். ஆக ப்ராக்டிகல் என்பதன் பொருளை-ஆகமத்தின் பொருளை ஆழ்வார் விளக்கினார். இனி தியரி எனும் நிகமத்தினை(வேதம்) விளக்கும் அழகு ! ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்ததனை வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு – இரண்டாம் திருவந்தாதி-39 வேதமானது ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷதம் என பிரிக்கப்படும். ஸம்ஹிதை என்பது துதிநூல்கள். ப்ராஹ்மணம் என்பது யக்ஞத்தின் வழிமுறைகளில் விளக்கம். ப்ராஹ்மணம் என்பது யக்ஞத்திற்கும் உண்மையான தாத்பர்யம் சொல்வது. உபநிஷதம் மோக்ஷம் பற்றி சொல்வது. ஆக ! வேதத்திற்கு ஆம்னா என்று சொல்வர். அதாவது அக்ஷரராஶி என்றும் பெயர் அக்ஷரங்களால் ஆனது. ஒவ்வொரு அக்ஷரமும் அனுதாத்த-உதாத்த-ப்லுதம் என உச்சரிப்புடன் கூடியவை. அதில் காணும் ஒவ்வொரு உச்சரிப்பு முதல் அக்ஷரம் வரை, சொற்கள் முதல் ப்ரகரணம் வரை அனைத்துமே ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியின் கணவன் மாதவனை விளக்க வந்தவை. இதுவே பாசுர பொருளாகும். எனவே வேதத்தினை பொருள் அறிந்தோ அறியாமலோ தொடர்ந்து ஓதுங்கள் என்றார். -தொடரும் ஸ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் #ராமாநுஜர்
ராமாநுஜர் - பூதத்தாழ்வார் BHOOTHATH AZHWAR பூதத்தாழ்வார் BHOOTHATH AZHWAR - ShareChat