மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள்.
*கிருபை உங்களை அழைக்கிறது!*
எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை தேடி நீங்கள் வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். காலைதோறும் அவரது இரக்கங்கள் புதிதாயிருக்கின்றன. இன்றைக்கு அவரது புதிய இரக்கத்தைக் குறித்து அறிந்துகொண்டு அதைப் பெற்றுக்கொள்ளபோகிறோம். "உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்று கர்த்தர் கூறுகிறார். ஆம், நீங்கள் அவருடையவர்கள். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே, குற்றவுணர்வு அவரை விட்டு உங்களைப் பிரிக்காதிருக்கட்டும். "நான் எவ்வளோ தவறு செய்துவிட்டேன்," என்று கூறாதிருங்கள். உங்கள் பாவம் பெரிதென்ற பொய்யை நம்பாதிருங்கள். நீங்கள் தமக்குச் சொந்தமானவர் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் உங்களை அன்போடும் கிருபையோடும் பேர்சொல்லி அழைக்கிறார்.
இந்த வல்லமையான வசனம், அவர் நம்மை மீட்டுக்கொண்டார் என்றும், தம்முடையவர்கள் என்று அழைப்பதாகவும் கூறுகிறது. நாம் எப்பொழுதும் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருப்பதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். அது, அவருடைய கிருபை; அவருடைய அன்பு. "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்று பவுல் நினைவுபடுத்துகிறார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீங்கள் கிட்டிச்சேர்க்கப்பட்டீர்கள். பவுல் இதை அறிந்திருந்தார். அவர் ஆண்டவரின் ஜனங்களை துன்புறுத்தினார்; பாடுபடுத்தினார்; அவரை விசுவாசித்தவர்களை துரத்தினார். ஆனாலும் தேவனுடைய இரக்கத்திற்கு அவர் அப்பாற்பட்டவராயிருக்கவில்லை.
பவுல், இவை எல்லாவற்றையும் செய்திருந்தபோதிலும், ஆண்டவர் அவரை அழைத்து, புதிய பெயரைக் கொடுத்து, "பவுல், நீ என்னுடையவன்," என்று கூறினார். தம்முடைய இரத்தத்தினாலே ஆண்டவர் பவுலை கிட்டிச்சேர்த்தார். பவுல், புதிய மனுஷனாக மாறினார். அந்த தருணத்திலிருந்து தன் முழு உள்ளத்தோடும் பவுல், இயேசுவுக்காக ஓடினார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. இன்றைக்கு அதே மறுரூபமாகுதலை ஆண்டவர் உங்களுக்கு அளிக்கிறார். அன்பானவர்களே, எந்தக் குற்றமும் பெரிதானதல்ல. பழைய காலம் இருளானதல்ல. ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்து மீட்கிறார்; உங்களை புதிய மனுஷனாக்குகிறார். இன்றைக்கு அவரிடம் உங்களை ஒப்படைப்பீர்களா?🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்


![⛪ வேளாங்கண்ணி சர்ச் - பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 - ShareChat ⛪ வேளாங்கண்ணி சர்ச் - பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 பபப்படாதே 6_00]69)6)] மிட்டுக்கொண்டே C TTn VFMRAIN EREU நீ என்னுபைபவன்lள்] 3 ० ٢؟ ٧٤٧٥ ٠ ٥٤ ஏசாயா 431 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_766170_26b2a793_1762991764838_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=838_sc.jpg)