ShareChat
click to see wallet page
search
பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்தவர். ஒரு அந்தண அடியார் சீமை சென்று திரும்பிய பின் அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர் ஏற்று கொள்வார் என்று எண்ணினார். இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன். அதாவது நீ போனது போறாதுன்னு ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும் என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா. ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக் கொண்டிருந்தார். பெரியவா அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு. ரா.கணபதி நின்று கொண்டிருந்தார். சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன் கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதம். சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால் சதாசிவத்துக்கு இந்த விஷயம் தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக் கொண்டிருந்தார். ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை பெரியவாளே கதி என்று நகர்ந்து கொண்டிருந்தார். இதோ சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை நீட்டிவிட்டார். பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு பக்கத்திலிருந்த தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார். இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம் இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டார். சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம் ரா.கணபதிக்கோ நிம்மதி பெருமூச்சு. பாத்தியா இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்லா தீர்த்தம் குடுத்துட்டார். சாஸ்த்ரத்தையும் மீறாமல் பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால் மட்டுமே முடியும். "ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
jai mahaperiyava - ShareChat
00:29