*புரட்டாசி ஸ்பெஷல்*
*பதிவு 28*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*ஏழுமலையான் தளிகை*:
🪷🪷🪷🪷🪷🪷🪷
கோவிந்தா ஹரி
கோவிந்தா 🙏
திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல்,எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.
குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய வேண்டும். குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும்.
உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து "கோவிந்தா" என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம்.
ஓம் நமோ வேங்கடேசாய 🙏
*கோவிந்தா ஹரி*
*கோவிந்தா* 🙏
ஓம் நமோ நாராயணாய 🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #🌸🙏 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை 🙏 #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨