* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 07/10/2025:*
**நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்’’ ஏசாயா 45:2*
**பிரியமானவர்களே!* *தேவனுடைய வழிநடத்துதல் இல்லாவிட்டால், கர்த்தர் நமக்கு முன் செல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது, நம்முடைய வாழ்க்கை பயணம் எப்போதுமே கரடு முரடானவைகள்தான். இந்த பாதைகளில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கைப் பயணத்தில் தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம். இந்த பயணத்தில் சரியான வழிநடத்துதல் நமக்கு இருந்தால் நமது வாழ்க்கைப் பயணம் இனிமையாக அதே வேளையில் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வெறுமையான வாழ்க்கை. பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை. சமாதானம் இல்லாத வாழ்க்கை. ஆனால் நம்முடைய வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டோம் என்றால் நமது வாழ்க்கைப் பயணத்தில் அவர் நம்மோடு கூட வருவது மட்டுமல்ல, அவர் நமக்கு முன்பாக சென்று எல்லாவற்றையும் சரியாக நடத்தித் தருவார். தேவன் நமக்கு முன்பாக செல்லும் போது நாம் எந்த வேலையாக செல்லுகிறோமோ அந்த வேலை வாய்க்கும். ஆமென்*
*🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️
**PR PAUL HAGIN.*
*NEW COVENANT STONE MINISTRIES*
📞
*+918838540945* #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச்