ShareChat
click to see wallet page
search
🪔 🌲புpரட்டாசி ஸ்பெஷல் 05🌲 ******************************** ♦️♦️நாலாயிர திவ்ய பிரபந்தம் ************************************** 🚩வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? 🌹பதவுரை 🔹வாரா அரு ஆய் வரும் என் மாயா= திருவுருவ த்தோடு வாராமல் அரூபியாய் உள்ளே வந்து தோன்றுகின்ற என் மாயவனே! 🔹மாயாமூர்த்தியாய் ஆராஅமுது ஆய்அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் = ஒரு நாளும் அழியாத தெய்வீக மங்கள உருவை உடையவ னே, எவ்வளவு அனுப வித்தாலும் தெவிட்டாத அமுதமாய், என் உள்ளுக்குள்ளே தித்தித்திருப்பவனே! 🔹தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திரு குடந்தை ஊரா = தொலையாத பாவ ங்களும் தொலையும்படியாக அடியேனை ஆண்டருளி னவனே திருக்குடந்தைப் பதியோனே! 🔹அடியேன் உனக்கு ஆள்பட்டும் இன்னம் உழல் வேனோ =அடியேன் உனக்கு அடிமைப் பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ. 🌹விளக்கம்: 🔺இப்பாசுரத்தில் எம்பெருமான் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி அரூபியாய் உள்ளே வந்து தோன்றியதை கூறுகிறார். 🔺அதோடு தன் பாவங்களை இல்லாமல் செய்த தையும் கூறுகிறார். திருவுருவத் தோடு வாரா மல், அரூபியாய் வந்து தோ ன்றுகின்ற, அடியே னுடைய மாயவனே! 🔺ஒருநாளும் அழியாத(மாயாத) தெய்வீக மங்கள உருவை உடையவனே.(முதல் அடியில், முதலில் வரும் “மாயா” என்ற சொல் “மாயவ னே” என்றும் அடுத்து வரும் அதே சொல் “மாயாத” என்றும் பொருள்படும்). 🔺எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுத மாய் என் உள்ளே தித்தித்திருப்பவ னே! தொலையாத பாவங்களும் தொலை யும்படியா க அடியேனை ஆண்டருளினவ னே, திருக்குட ந்தைப்பதியோனே! 🔺அடியேன் உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ. 🌹ஓம் நமோ நாராயணாய... #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏பெருமாள் #🙏ஆன்மீகம் #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🛕புரட்டாசி மாதம் வழிபாடு - ஸ்ரீ பெருமாளே ஓம் போற்றி நல்லதே நடக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் அன்புடன் இனிய அச்சு எடிட் காலை வணக்கம் ஸ்ரீ பெருமாளே ஓம் போற்றி நல்லதே நடக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் அன்புடன் இனிய அச்சு எடிட் காலை வணக்கம் - ShareChat