குவைத் எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தியர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:
குவைத்திலுள்ள எண்ணைய் நிறுவனத்தின் உற்பத்தி(ரிக்) பகுதியில் ஏற்பட்ட விபத்தில் கேரளா மாநிலம், கண்ணூர் அடுத்த கூடாளி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ்(38) என்ற இந்திய இளைஞர் இன்று(25/11/25) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ராஜேஷின் உடலை நாட்டிற்கு கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி அப்தல்லியில் உள்ள எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட விபத்தில் நிஷில்(40) மற்றும் சுனி(43) என்ற
இரண்டு மலையாளிகள் கனமான பொருள் உருண்டு தலையில் விழுந்ததில் தலை நசுங்கி உயிரிழந்தனர். இதே விபத்தில் ஜிஜேஷ்(28) என்ற கேரளா இளைஞரும் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த இருவரும் எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் மீண்டும் மற்றொரு இந்தியர் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️


